இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க தலங்கள் பல உண்டு. தலைநகர் கொழும்புவிலும் பல கோயில்கள் இருக்கின்றன.
வஜிரா பிள்ளையார் ஆலயம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ளது. இப்பொழுது புணருத்தாரண வேலைகள் நடைபெறுகின்றன.
புதிய ஐந்து நிலைக் கோபுரம் கண்கவர் வர்ணங்களுடன் ஏற்கனவே எழுந்து நிற்கிறது.
இலங்கையின பாடல்பெற்ற சில தலங்கள் பற்றிப் பார்ப்போம்.
திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். "தாயினும் நல்ல தலைவனென்றடியார்.... எனத் தொடங்கி கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே" எனப் பாடி முடித்துள்ளார்.
மன்னாரை அண்டிய மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வரம் கேது பூசித்ததால் இப்பெயர் வந்தது எனவும் கொள்கிறார்கள். இத் தலத்தைப் போற்றி சுந்தரமூர்த்தி நாயனாரும், திருஞான சம்பந்தரும் பாடியுள்ளார்கள். 'நத்தார் படை ஞானன்......செத்தார் எலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே.' என முடித்துள்ளார்.
வடபகுதியில் கீரிமலையில் அமைந்துள்ள நகுலேஸ்வரம். இதுவும் பாடல் பெற்ற தலமாகும்.
மேற் கூறிய மூன்று ஆலயங்களுடன் திருத்தம்பலேஸ்வரம், முன்னேஸ்வரம் என ஐம்பெரும் சிவஸ்தலங்கள் பிரசித்தமானவை.
தலைநகர் கொழும்புவில் பொன்னம்பலவாணேசர் கோயில் விஜயநகர் கட்டடக்கலையைத் தழுவி கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.
மயூரபதி அம்மன் ஆலயம், தெகிவளை விஷ்ணு கோயில், பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார், பம்பலப்பிட்டி கதிரேசன் கோயில், என மேலும் பல பிரசித்தி பெற்று விளங்குகின்றன.
தென்னிலங்கையில் கதிர்காமக் கந்தன் புகழ் பெற்ற தலம். முருகன் வள்ளி நாயகியை திருமணம் செய்த தலமாகவும் கூறுகிறார்கள். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம்.
யாழ் நல்லூரில் அமைந்துள்ள நல்லூர் கந்தன், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் என பற்பல கோயில்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன.
விநாய வணக்கம் பண்டு தொட்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சங்க கால இலக்கியங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை. பல்லவர்கால சிற்பங்களில் முதல் முதலாக விநாயகர் புடைச் சிற்பமாகக் காணப்படுகிறார்.
பிற்கால சோழர் காலத்திலும் பல விநாயக சிலைகள் கோயில்களில் அமைக்கப்பட்டன. திருஞான சம்பந்தர் 'பிடியதன் உருவுமை.... என விநாயகரை தொழுது பாடியுள்ளார்.
இறை வணக்கத்தில் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே ஏனைய கடவுளரை வணங்குவார்கள். பிள்ளையாரை சந்தணம், சாணியில் பிடித்து வைத்து வணங்கும் வழக்கமும் இருக்கின்றது.
Thanks:- http://paravaigal.wordpress.com |
மார்கழிமாதத்தில் அதிகாலையில் முற்றத்தில் கோலமிட்டு சாணிப்பிள்ளையார் பிடித்து வைத்து பூசணிப்பூ,பீர்க்கம் பூவைத்து வணங்குவார்கள். சாணிப்பிள்ளையாரை எடுத்துச்சென்று கடல்,ஆறுகளில் விடுவார்கள்.
அறுகம் புல், எருக்கலை, தும்பை, கொன்றை விநாயகருக்கு அர்ச்சிக்கும் பூக்களில் சிறப்புப் பெறுகின்றது. ஆவணிமாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விநாயக விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. திருவெம்பாவைக்கு முன் விநாயகர் கதை விநாயக புராணம் 21 நாட்கள் விரதம் இருந்து படிப்பார்கள். ஊருக்கு ஊர் ஆலமரம் அரச மரங்கள் ஆற்றங்கரைகளில் அமர்ந்திருந்து மக்களைக் காப்பவரும் இவர்தான்.
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தது மோதகம் எள்ளுருண்டை, அப்பம் அவல், கரும்பு,
நன்றி :- vadaliyooraan.blogspot.com |
பம்பலப்பிட்டியில் காலி வீதியை ஒட்டி மேற்குத் திசையை நோக்கியபடி அமைந்துள்ளது வஜிராப் பிள்ளையார் ஆலயம். இப்பொழுது புனருத்தாரண வேலைகள் நடைபெறுவதால்
மூலஸ்தான விநாயகரை அருகே இருக்கும் சிறிய மண்டப்தில் தற்காலிகமாக வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றார்கள்.
புதிய ஐந்து நிலைக் கோபுரத்தில் புராணக் கதைகளைக் கூறும் தெய்வச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தைச் சுற்றிலும் வெளிப் பிரகார மதிற்சுவர்களின் மேல் விநாயகரின் பல்வேறு உருவங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் உட்புறம் சென்று பார்க்கலாமா எனக்கேட்டோம் ஆம் என அனுமதி கிடைத்தது. சிறிது திறந்திருந்த கோயிலின் பெரிய கதவினூடாக உள்ளே சென்றோம்.
கோயிலின் உட்பிரகார மேற்குப் பக்க சுவர்களில் சிவ தாண்டவ நடனங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஒரே நிலையில் பிள்ளையார், சிவன் பார்வதி, முருகன் ஸ்தானங்கள் அமைக்கபட்டுள்ளன.
வடக்குச் சுவர்களில் முருகனின் ஆறுபடை வீடுகளும்
அம்மனின் பல்வேறு திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் பின்புறம் தீர்த்தக் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
குளத்தின் பின்புறம் முருகன் சிவன் அம்மனுக்கு ஸ்தானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கிழக்குப்புற வீதியி;ல் பல சிவலிங்கங்களும் நந்திகளும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவற்றைச் சுற்றி வந்தால் யாக குண்டல மண்டபம் அமைந்திருப்பதைக் காணலாம்.
அவற்றையும் கடந்து வந்தால் சமய குரவர்கள் மண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோயில் வெளிவீதியில் நேர்த்திக் கடனாக நேர்ந்து விடப்பட்ட பசுக்களை தென்னந்தோப்பு நிழலில் கொட்டில்கள் அமைத்துப் பராமரித்து வருகின்றார்கள்.
கோமாதா எங்கள் குலமாதா பசி தீர்க்க ஒரு கட்டுப் புல்லை கோயில் கடையில் வாங்கி கொடுத்து மகிழ்ந்தோம்.
அம்மா என்குது கன்றுக் குட்டி.
புறாக் கூட்டத்தாருக்கு வீட்டில் இருந்து ஒரு பையில் அரிசி எடுத்துச் சென்றோம்.
சிட்டுக்களுடன் சிட்டாக சிட்டுக்களும் மகிழ்கின்றன.
கூட்டத்திலே வெள்ளைப் புறா ஒன்று.
அபிஷேகத்திற்கு இளநீர், பால், பழம், கற்பூரம் ஊதுபத்தி வாங்கிக் கொடுத்து கண்குளிர அபிஷேகம் பூசைகள் கண்டு வணங்கி வந்தோம்.
சீரடி பாபாவும் ஒருபுறம் வீற்றிருக்கிறார். வியாழக் கிழமை மாலைகளில் பஜனை நடைபெறுகின்றது.
தற்காலிகமாக அமர்ந்துள்ள விநாயகருக்கு எதிர்புறம் உள்ள கட்டிடத்தில்
விஷ்ணுவும் வீற்றிருக்கின்றார்.
ஆஞ்சநேயரும் வணங்கி நிற்கின்றார்.
நரஸிம்கமுர்த்தியும் கோபாவேசத்துடன் அருள்கின்றார். அவர் கோபம் தணிய வணங்கி விடை பெற்றோம்.
மாதேவி
அழகான புகைப்படங்களுடன் சிறப்பாகப் பதிவு செய்திருக்கறீர்கள். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவஜிராப் பிள்ளையாரின் தரிசனம் கிடைத்தது...
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
இன்று என்னுடன் வேலைசெய்யும் பிரான்சியர்(விநாயக பக்தர்) பாண்டிச்சேரி சென்று மணக்குளத்து விநாயகரைத் தரிசித்துவிட்டு எனக்கு ஒரு விநாயகர் சிலை, உருத்திராட்சமாலை ஞாபகமாகத் தந்தார்.தமிழ்மணத்திலும் உங்கள் விநாயகர் தரிசனம், நான் இலங்கையனாக இருந்தும் கொழும்பு இந்து ஆலயம் பம்பலப்பிட்டி தவிர ஏதும் தரிசிக்கவில்லை.படங்களுடன் அமர்க்களமாக தரிசனம்.
ReplyDeleteஇலங்கையில் ஆலய தரிசனங்கள் இன்பமாக அமையும், இந்தியாவில் அது மிகக் கடினம் என்பது என் அனுபவம்.
வட இலங்கையில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.பிரசித்தமானது. அதுபோல் நயினாதீவு நாகபூசணி அம்மன் - சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய கோவில்.,காரைநகர் ஈழத்துச் சிதம்பரம், யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரர் கோவில்- சோழர் தொடர்புடையது,அனலைதீவு ஐயனார் கோவில், வற்றாப்பளை அம்மன் புகழ்மிக்கவை. அத்துடன் பெருமாள் கோவில்களாக யாழ்ப்பாணம் பெருமாள் கோவில், பொன்னாலை வரதராஜப் பெருமாள், பருத்தித்துறை, வல்லிபுரம் ஆள்வார் கோவில் பிரசித்தமானவை. இதில் வல்லிபுர ஆள்வார் கோவிலில் மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்த போது தரிசனம் செய்ததாகவும், காரைக்குருச்சி அருணாசலம் இக்கோவிலில் கச்சேரி செய்ததாகவும் அறிந்துள்ளேன்.
இலங்கையில் சைவக் கோவில்களில் விஸ்ணுவுக்கு ஒரு சன்நிதானம் இருப்பது மிக இயல்பானது.
இலங்கையில் சைவர்கள் அதிகம் வைணவர்கள் மிகச் சொற்பம் ஆனால் எந்தப் பாகுபாடும் அறியோம்.
யாழ்பாணம் பெருமாள் கோவிலில் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும், அத்தனை பேரும் சைவர்களே!!
சந்தர்ப்பம் அமைந்தால் இக்கோவில்களையும் சென்று தரிசிக்கவும்.
அழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்கள் ஊர்ப் பக்கம் என்னால் வர முடியாவிட்டாலும் உங்கள் பதிவின் மூலம் அங்குள்ள கோயில்கள் மற்ற இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. பம்பலப்பிட்டியில் உள்ள வஜிரா பிள்ளையார் ஆலய தரிசனம், தெளிவான வண்ணப் படங்களுடன். பாராட்டுக்கள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Muruganandan M.K.
ReplyDeleteபிள்ளையாரை தர்சித்ததற்கு மிக்கநன்றி திண்டுக்கல் தனபாலன்.
ReplyDeleteவாருங்கள் யோகன் பாரிஸ்.மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்கள் ஊட்டம் விரிவான பகிர்வாக இருக்கின்றது.இலங்கைக் கோயில்கள், தர்சனங்கள்,வழிபாட்டு முறைகள் பற்றி பலரும் அறிய உதவும்.
நிறைந்த பல வரலாற்றுத் தகவல்களையும் தந்திருக்கின்றீர்கள்.
முடிந்தபோது நீங்கள் குறிப்பிட்ட கோயில்களில் இதுவரை தர்சிக்கக் கிடைக்காதவற்றை சென்று தர்சிப்பேன். பல புதிய தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.
உங்கள் ஊட்டம் உற்சாகத்தைத் தருகின்றது.
மிக்க நன்றி.
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன்.
ReplyDeleteவாருங்கள் தி.தமிழ் இளங்கோ.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மகிழ்கின்றேன்.
எங்கள் ஊர்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி.
வருகைக்கு மிக்க நன்றி.
பம்பலப்பிட்டியி.இப்பிடியொரு அழகான கோவிலா.வரும்நேரம் நிச்சயம் போகவேண்டும்.நிறைவான பதிவு தந்திருக்கிறீர்கள் மாதேவி.அந்த மோதகம்....!
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht
ReplyDeleteRESPECTED MADAM,
I WOULD LIKE TO SHARE ANOTHER AWARD WITH YOU.
PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.
THANKING YOU,
VGK
Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
ReplyDeleteஹைய்யோ!!!! அருமையான படங்கள்!
ReplyDeleteஅதிலும் அந்த மாடு பாப்பா கன ஜோர்!!!!!
நல்ல அம்சமான கோபுரமும் சிலைகளும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
ReplyDeleteபடங்களும், பகிர்வும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி…
வியாழக்கிழமை ஷீரடி சாய் பாபா தரிசனம் , பிள்ளையார் தரிசனம் மற்ற தெய்வங்கள் தரிசனம் ஆனது நன்றி.
ReplyDeleteவாருங்கள்.மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவருகைக்கு நன்றி கோமதி அரசு.