Thursday, September 6, 2012

மாது கங்கையில் Madu ganga படகுச் சுற்றுலா

கொழும்பு காலி பிரதான வீதியில் பலப்பிட்டிய அமைந்திருக்கிறது. இங்குதான் இந் நதி ஓடிக் கடலுடன் கலக்கிறது.


Ahungalle அப்பால் அடர்ந்த காட்டின் ஊடாக மாது கங்கை பாய்கிறது. இலங்கையின் இரண்டாவது பெரிய ஈர நிலமாக இருக்கிறது.


கீரிப் பிள்ளை இனங்கள், 303 வரையான தாவர இனங்கள் இங்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். இவை 95 குடும்ப வகைகளைச் சார்ந்தவையாகும். 248 வகையான முதுகெலும்புடைய விலங்குகள் உள்ளனவாம்.

மீன் பிடிக் குடும்பங்களே பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆற்றில் மீன் இறால் பிடிப்பதையும் இரசித்துப் பார்க்கலாம்.

புதிய வகை இனங்களான நண்டு, மீன், இறால் இனங்கள் இங்கு இருக்கின்றன.



வெளிநாட்டினர் மிகவும் விரும்பி சுற்றுலா செல்லும் இடம் என்பதால் பல ஆடம்பர ஹோட்டல்கள் கங்கைக்கு அருகில் இருக்கின்றன.

கொழும்பிலிருந்து 75 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்விடம் உள்ளது. 2.45 மணிநேரத்தில் சென்றடையலாம்.  


மோட்டார் படகுகளில் நதியில் சவாரி சென்று பல அற்புதமான காட்சிகளைக் காணலாம். உல்லாசப் பயணிகளின் பரடைஸ் எனவும் அழைக்கிறார்கள். இரண்டு கிலோ மீற்றர் வரை படகில் சென்று இன்புற்று வரலாம். சுற்றிவர 25-30 தீவுகள் இருக்கின்றன. ஆழமற்ற ஆறு.  ஆழமான இடத்தில் 3 மீற்றர் தாளம் இருக்குமாம்.

நாங்கள் மோட்டார் படகு ஒன்றில் ஏறி ஆற்றில் பயணித்தோம்.
வெள்ளை நிறப் பறவைகள் சிறிய மரங்களில் கூட்டமாகக் கூடியிருந்து மகிழ்கின்றன. செட்டையடித்துப் பறந்து திரிந்து எம்மையும் மகிழ்வித்தன. பாலத்தின் கீழாக பயணித்தோம்.


பாம்புத் தீவு, ஐந்து சதத் தீவு (Satha pahe Dupatha>) பன்சலத் தீவு, நய் தீவு எனச் சில தீவுகளுக்கு பெயர்களும் உள்ளன. சத பக துவா மிகவும் சிறிய தீவு. பழைய காலத்தில் 5 சதத்திற்கு வாங்கியதாக வாய் மொழிக் கதைகள் உள்ளன. சிலர் நாணய வடிவில் இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இரண்டு முக்கிய தீவுகளில் நைடுவ Nai Duwa, மாடுவா பெரிய தீவு. இது 562 மீற்றர் நீளம் கொண்ட தீவு. தீவுகளின் கரையோரங்களில் செழித்து வளர்ந்திருக்கும் சதுப்பு நிலமரங்கள் நீர் அரிப்பினால் தீவுகள் அழியாமல் பாதுகாக்கின்றன.

Maduganga Kotdoowa Rajamaha Viharaya
தேவாலயத் தீவு 800 ஆண்டுகள் பழமையானது. கோத்டுவா ராஜமஹா விகாரை இந்த கங்காவில் அமைந்துள்ளது.

ஐந்து சததீவைத்தாண்டிப் பயணித்தோம். மிகவும் சிறிய தீவு கல்லாலான சிறிய ஒரு கட்டடம்  இருக்கின்றது. மரம் ஒன்று பரந்து விரிந்து கிளைகள் பரப்பி நிற்கின்றது அழகாக இருந்தது.



நீர்ப் பாம்பு ஒன்று நீரின் மேல் ஓடித் திரிந்து பயங்காட்டியது. இவற்றையெல்லாம் இரசித்த படியே படகில் சவாரி செய்கின்றோம். பாலத்தின் கீழால் படகு செல்கிறது.

இருபறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்க கிளைகளுக்குக் கீழாக பயணித்துச் செல்வது சொல்ல முடியாத இனிய அனுபவத்தை தந்தது.




இடையே திகில் பயணமும் தொடர்கின்றது. நீரில் கபரகொயாக்களும் ஓடித் திரிந்து பயங் காட்டின.

விகாரை தூரத்தே அழகாகக் காட்சி தருகின்றது. படகில் தொடர்ந்து விகாரையைத்தாண்டிப் பயணித்தோம்.




உயரமான மேடுகளில் வீடுகள் அமைத்து மக்கள் வசிக்கிறார்கள். பொதுவாக தனித்தனி வீடுகளாகவே இருப்பதைக் கண்டோம். உயரக் குன்றில் அமைந்துள்ள கறுவாப் பயிரிடப்பட்டிருந்த வீட்டிற்கு படகை செலுத்து நிறுத்தினார்கள்.


படகிலிருந்து மகிழ்ச்சியாக இறங்கினோம். மேட்டில் அழைத்துச் செல்லப்பட்டோம். கறுவா மரங்களினூடாக ஒற்றை அடிப்பாதையில் ஏறிச் சென்றோம்.


நாங்கள் சென்று பார்த்த வீடும் தனித்திருந்தது. வீட்டைச் சுற்றிலும் நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வீட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் படகை வலித்தே செல்லவேண்டும். பக்கத்து வீட்டார் தொல்லையிலிருந்து விடுதலை நேரம் கெட்ட வேளை அழைப்பு மணிகேட்காது.


ஓவ்வொரு வீட்டிலும் ஒரு படகு வைத்துள்ளார்கள். தாங்களே வலித்துச் சென்று மாதாந்திரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாகச் சொன்னார்கள்.

குடிசை வீடுதான். ஒரு கொட்டிலும் ஒரு அறையும் சாய்வாகத் திறந்த சமையலறையும் இருந்தது.

கொட்டிலில்; வெட்டிய கறுவா மரங்களை பரப்பி வைத்திருந்தார்கள் கத்தியால் கீறிக் காட்டினார்கள். வெயிலில் காய வைத்த துண்டங்கள் காயக்காய சுருண்டு வரும். ஓரளவு காய்ந்த துண்டங்களை கொட்டில் கூரையில் மேலே செருகி வைத்து நன்கு காயவிட்டிருப்பதைக் கண்டோம்.
கறுவா மரங்களையும் சென்று காட்டினார்கள். விற்பனைக்கு பைக்கற்களில் கறுவாக்களை வைத்திருந்தார்கள். கறுவாப் பொடியும், கறுவா எண்ணெயும் கிடைக்கின்றன. நாங்களும் இரண்டு இரண்டு பைக்கற்றுகள் வாங்கி வந்தோம்.

சிறிய குடும்பம் ஒன்று கணவன் மனைவி குழந்தை ஒன்று அவ்வீட்டில் வசிக்கின்றார்கள். பின்புறமுள்ள திறந்த சமையலறையைக் காட்டினார்கள். இரு விறகு அடுப்புக்கள் கட்டி வைத்திருக்கின்றார்கள். ஒரு பரணில் சட்டி பானைகள் அடுக்கி வைத்திருந்தார்கள்.

கறிவேப்பிலை மரம் சமையலறை அருகே செழித்து வளர்ந்து  நிற்கின்றது.
ஓர் சில கோழிகளும் நாய் ஒன்றும் அவர்களுடன் சிறு தீவைப் பகிர்ந்து கொள்கின்றன.

குழாய் மூலம் கொட்டிலுக்கு அருகே ஒரு இடத்தில் மட்டும்  தண்ணீர் வருகின்றது.

வெளி நாட்டுக் குடும்பம் ஒன்று எங்களுக்கு முன்பே இங்கு பார்க்க வந்திருந்தார்கள்.


பல அரிய காட்சிகளையும், பல உல்லாசப் பயணிகள் படகில் செல்வதையும் ஓடும் கங்கை ஆற்றில் பயணித்தபடியே கண்டுகளித்து வந்தோம்.

அவ்வூர் குடும்பம் ஒன்று ஆற்றில் பயணித்து செல்கின்றது. பெண் ஒருவர் குழந்தைக்கு வெயில் சுடாதபடி குடை ஒன்றைப் பிடித்தபடி வள்ளத்தில் அமர்ந்திருக்கின்றார். ஒருவர் படகை ஓட்டுகின்றார். தூரத்தே இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

நன்றி:- புகைப்படங்கள் கூகிளார் உதவியில் இணையம்

-: மாதேவி :-

28 comments:

  1. சூப்பர் இடமா இருக்கே!!!! அசப்பில் பார்த்தால் கேரளா போல! அருமை! ரசித்தேன்.

    ReplyDelete
  2. இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    புகைப்படங்கள் : இணையத்தில் கிடைத்ததா...?

    ReplyDelete
  3. அருமையான படங்களுடன் அழகான விளக்கங்கள்.

    ரொம்பவும் நல்லாயிருக்கு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சிலிர்ப்பான அனுபவமே. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  5. வாருங்கள் துளசிகோபால்.

    சூப்பர் இடம்தான்.

    கம்போடியாவிலுள்ள kampong phloek மிதக்கும் கிராமத்திற்கு ஒப்பிடுகின்றார்கள். அங்குள்ள வீடுகள் வாவியில் மரத்தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கின்றன.
    இங்கு இயற்கையின் படைப்பில் அமைந்துள்ள தீவுகளில் வசிக்கின்றார்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    நாங்கள் எடுத்த படங்களை தொலைத்துவிட்டோம். :((
    அதனால் இணையத்திலிருந்து எடுத்து இணைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
  7. வாருங்கள் வை.கோபாலகிருஷ்ணன்.

    வருகைக்கும்,வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. மகிழ்கின்றேன்.
    மிக்க நன்றி Rathnavel Natarajan.

    ReplyDelete
  9. நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  10. அழகான இடங்கள்;படங்கள்

    ReplyDelete
  11. இருபறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்க கிளைகளுக்குக் கீழாக பயணித்துச் செல்வது சொல்ல முடியாத இனிய அனுபவத்தை தந்தது

    இனிய அனுபவப்பகிர்வுகளுக்கு நன்றிகள் தோழி !

    ReplyDelete
  12. இந்தமுறை போனால் போக நினைக்கிறேன்.அவ்வளவு ஆசையாக இருக்கிறது மாதேவி நீங்கள் இணைத்திருக்கும் படங்களும் அந்த இடங்கள் பற்றிய விமர்சனமும் !

    ReplyDelete
  13. நீங்கள் வர்ணிச்சிருக்கறதும். தேடித்தேடி இணைத்த படஙகளும் மனசை அள்ளுது மாதேவி. நேர்ல பாக்க முடியாத என்மாதிரி ஆட்களுக்கு ரொம்ப இதமான பகிர்வு. ஆனா... கபரகொயாக்களும் -ன்னு எழுதியிருக்கீங்களே... அந்த வார்த்தை மட்டும் புரியலை... மலைப்பாம்புன்னு அர்த்தமா?

    ReplyDelete
  14. நல்ல படங்கள் .. பசுமையாக கண்ணை குளிர்ச்சியாக வைக்கின்றன படங்கள் .. பகிர்வுக்கு நன்றிகள

    ReplyDelete
  15. சுற்றுலாவை நின்று நிதானமாக அனுபவித்து இருக்கிறீர்கள் என்பதனை கட்டுரையின் நடையே தெரிவிக்கின்றது.

    ReplyDelete
  16. குட்டன்
    இராஜராஜேஸ்வரி
    ஹேமா

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. வாருங்கள் பால கணேஷ்.

    "கபரகொயாக்கள்" சிங்களப் பேச்சுவழக்கில் அப்படியே எழுதிவிட்டேன். மன்னிக்கவும். ஆங்கிலத்தில் watter monitor தமிழில் சரியாகத் தெரியவில்லை சிலர் ஜலமந்ரா அல்லது நீர் உடும்பு என்கிறார்கள்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  18. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரசன் சே.

    ReplyDelete
  19. வாருங்கள் தி.தமிழ் இளங்கோ.

    எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இயற்கையின் படைப்பில் இப்படியும் இடங்களா என ஆச்சரியப்படவைத்தது.

    வருகைக்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  20. படங்களும் அதனுடன் சேர்ந்த அழகிய வருணனையும் நன்றாக உள்ளது தோழி.
    ரசித்தேன்.

    ReplyDelete
  21. மிக நன்றி மாதேவி. நாங்க கழுத்துறை மாவட்டத்தில் எஸடேட்டில் இருந்த போது வெள்ளப் பெருக்கு வரும். தேயிலைக் கொழுந்துகள் அன்றன்று தொழிற்சாலைக்குப் போகும். வெள்ளம் வந்தால் படகில் செல்லும். அப்படி நாமும் போயுள்ளோம். பயங்கரம் ஆனால் உல்லாசம் தான் அந்த நினைவு வந்தது தங்கள் பதிவு வாசிக்க. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. விளக்கங்களுடன் அருமையான படங்கள். தாங்கள் எடுத்த படங்கள் அத்தனையும் அருமை...

    ReplyDelete
  23. நாங்களும் கண்டு ரசித்தோம்
    படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. மாது கங்கா அழகோ அழகு.

    ReplyDelete
  25. மகிழ்கின்றேன். மிக்க நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  26. இயற்கை அழகு கொஞ்சும் மிக அற்புதமான இடமாக இருக்கிறதே.
    புகைப்படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
  27. நீங்கள் கூறியதுபோல் மிகவும் அழகிய இடம். நீங்கள் சென்றதில்லையா? சென்று பாருங்கள் கமாராவுடன் தான் நிற்பீர்கள் :)

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete