Wednesday, December 21, 2011

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.


மார்கழிப் பூவே... மார்கழிப் பூவே...பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா ?

மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்மை, காதல்.

சங்கப் பாடல்களிலே மலர்களை பெண்களுக்கு உவமையாக வர்ணித்திருப்பதைக் காணலாம்.

காந்தள்

காந்தள் கையழகி, ரோஜா வதனத்தாள்.....

செண்பகம்

நொச்சி, தும்பை, கொன்றை, பாதிரி, புங்கை,  குரந்தை, வாகை, வெட்சி, குறிஞ்சி மலர், இருவாட்டி, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, பன்னீர், ஆம்பல், அல்லி, குமுதம், தாளம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், சம்பங்கி, ரோஜா, துளசி, பவளமல்லி, நந்தியாவட்டை, சாமந்தி,சூரியகாந்தி,மந்தாரை எனப் பற்பல மலர்கள் பூத்து மணம்பரப்பி நிற்கின்றன.

மனோரஞ்சிதம்

மகிழம்பூ, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, நாகலிங்கப்பூ, புன்னை, செவ்வரத்தை, கனகாம்பரம், என அடுக்கிக் கொண்டே போய்,  ஓர்க்கிட், எகஸ்சோரா, போகன்விலா, அந்தூரியம் எனப் பலப்பல உருவாக்கங்கள் இழுத்துக் கொள்ளுகின்றன எம் மனங்களை.

நாகலிங்கப்பூ

சங்கப் பாடல்களில், மிகவும் புகழ்பெற்ற குறிஞ்சி மலர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும் என்பது பலரும் அறிந்ததுதான். மலைச்சாரலிலே பலவகையான பூக்கள் இருந்தபோதும் தேன் நிறைந்த இம் மலருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

குறிஞ்சிப்பூக்கள்

குறிஞ்சி செடிகளின் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சி கொடுப்பதாக கவிஞர் ஒருவர் சொல்கின்றார். இம் மலரில் இருநூற்றி ஐம்பது வகைகள் இருப்பதாக கூறுகின்றார்கள். ஐம்பத்தொன்பது வகை தென்னிந்தியாவில் உள்ளது என்கிறார்கள்.குறிஞ்சி மலரின் தேன் மருத்துவத்தில் அதிக இடத்தைப் பிடிக்கின்றது. அதனால்தான் குறிஞ்சித் தேனுக்கு அதிக கிராக்கி. 

நிலங்களை ஐந்நிலங்களாக பூக்களின் பெயர்களாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனப் பிரித்திருந்தார்கள்.

குறிஞ்சிப் பாட்டில் பூக்களின் பெயர்கள் நிறைந்த பாடல் இருக்கின்றது. அரசர்கள் போரில் வெற்றிபெற்று திரும்பும்போது வாகை மலர்மாலை சூடி வருவார்கள்.

அரசிமார் தாளம்பூ ஜடை போட்டிருப்பார்கள்.

பெண்கள் தலையில் சூடிக்கொண்டார்கள். காதலின் பரிசாகவும் பூக்கள் பண்டைய காலம்தொட்டு; அங்கம் வகிக்கின்றன. பூக்களை மாலையாகக் கட்டி திருமணநாளில் அணிந்து கொண்டனர்.  பூக்களை மாலையாகத்தொடுத்து இறைவனுக்கு சாத்தி வணங்கினர். பின்னர் பெண்கள் பூச்சரங்கள், கதம்பங்கள், மாலைகள் எனத்தொடுத்து அணிந்தார்கள்.

'கார்நறுங்கொன்றை' என கொன்றையைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர். முல்லைக்கு தேர்கொடுத்த பாரிவள்ளலையும் அறிவோம்.

அனிச்சம்

அனிச்சம் பூவை விருந்தினருக்கு உவமையாக 'மோப்பக் குழையும் அனிச்சம்'என்கிறார் வள்ளுவர். 

குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம்; தரும் பவள வாயினையும் உடையவளே என்றெல்லாம் காதலன் காதலியை வர்ணித்திருப்பதைக் காணலாம்.

அல்லி, ஆம்பல் இனத்தில் ஐம்பது வகையான கொடிகள் உள்ளன.
மல்லிகை( JASMINUM SAMBAC) இருநூறு இனங்கள் உள்ளன என்கிறார்கள்.

வேறோரிடத்தில் காதலன் காதலியைப் பிரிந்து செல்கின்றான் 'நெய்தல் மலர்போன்ற அவளது கண்' என்கூடவே வருகின்றதே என நினைக்கின்றான.;
நாட்டுப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும் பூக்கள் தனியிடம் பிடித்துள்ளன.

நறுமண மலர்களிலிருந்து அத்தர், பன்னீர், ரோஸ் எசன்ஸ் செய்து கொள்கிறார்கள்.

இறைவனுக்கு அர்ச்சிக்கும் பூக்கள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. காட்டுப்பூக்கள், மயானப்பூக்கள், நீர்ப்பூக்கள், செடிப்பூக்கள், கொடிப்பூக்கள், மரப்பூக்கள் எனப் பலவகையாக இருக்கின்றன.

இமையமலைச் சாரலில் பல்வகையான அரிய அழகிய பூக்கள் காணப்படுகின்றன.

பூக்கள் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. அதனால்தான் பல்நெடும் காலமாக மருத்துவத்தில் பயன் படுத்தி வருகின்றார்கள். உணவாகவும் உட்கொள்ளப் படுகின்றன. 'டேன்டேலியன் மலர்கள்' வைனாக தயாரிக்கப் படுகின்றன. 'ஹாப்ஸ் மலர்கள்' பீரை சுவையூட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

ஓணம் பண்டிகையில் பூ அலங்காரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மார்கழியில் கோலத்தில் பிள்ளையார் வைத்து  பூசணிப்பூக்களால் வணங்குவார்கள்.

தைப்பொங்கலன்று ஆவாரம் பூக்கள், கண்ணுப் பூக்களை வீட்டு வாயிலில் வைப்பார்கள்.ஆவாரம் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ கார்ட்ஸ் என்கிறார்கள்.

நெப்பந்திசு (NEPENTHES)    பூச்சியை உண்ணும் தாவரம். இது ஒருவகை குடுவைபோன்ற தோற்றத்தை உடையன. பூக்களின் முனைகளில் நீண்ட மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும்.

நெப்பந்திசு

பூக்களின் கவர்ச்சியாலும், தேனாலும், வாசனையாலும் ஈர்க்கப்படும் பூச்சிகள் மயங்கி பூவினுள் செல்லும். பூவின் வழுவழுப்பான சுரத்தலினால் பூச்சிகள் குடுவையின் உள்ளே விழுந்து விடும். பூச்சிகள் வெளியே வரமுடியாதவாறு பூக்களின் உள்நோக்கி வளைந்திருக்கும் மூடிகள் தடுத்துவிடுகின்றன.

அதிக அளவில் ஒரே தடவையில் பூக்கும் பூக்கள் வைனீஸ்விக்டோரியா என்ற தாவரத்தில் பூக்கின்றன.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ 'கார்ட்ஸ்' என்கிறார்கள்.

உலகின் மிகச் சிறிய மலர் 'வொல்பியா ' எனப் படுகின்றது. இவை குலைவடிவில் இலகுவாக வீழ்ந்து விடக் கூடியதாக இருக்கின்றன. இதில் இரண்டுவகை இனங்கள் உள்ளன..

கிளிபோலவே சொண்டு தலை, வால் என அச்சொட்டாக ஒரு பூ தாய்லாந்து தேசத்தில் இருக்கிறது. கிளிப்பூ (Parrot Flower) என அழைக்கப்படும் இது அங்கும் இப்பொழுது அரிதாகவே காணப்படுகிறதாம்.

கிளிப்பூ


இயற்கையின் படைப்பில் பூக்கள் எவ்வாறேல்லாம் அதிசயிக்க வைத்து மகிழ்ச்சி தருகின்றன..பூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள்  பதிவைக் கிளிக்குங்கள்.

:-மாதேவி-:
0.0.0.0.0.0.0
30 comments:

 1. பூக்களின் படங்கள் - தேடிப்பிடித்து போட்டு அசத்தறீங்க... ரொம்ப நல்லா இருக்கு....

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  நிறைய படங்கள்.
  நிறைய தகவல்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. பூப்போன்ற அழகான பதிவு.

  தலைப்பு மிகவும் அருமை!

  எனக்கும் அதை கேட்கத்தான் ஆசை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள். vgk

  ReplyDelete
 4. வாருங்கள் வெங்கட் நாகராஜ்.

  சில மலர்கள் இப்பொழுது அரிதாகவே உள்ளன. அவற்றை மீண்டும் நினைவில்கொண்டு வர விரும்பினேன்.

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கும் வருகைக்கு மிக்க நன்றி Rathnavel.

  ReplyDelete
 6. பூக்கள் அனைவரையும் தம்வசம் இழுத்துக்கொள்ளும்.

  எத்தனை தடவைகள் பூங்காவனங்களுக்குச் சென்றாலும் புதிய தாகப் பார்ப்பதுபோல அவற்றை பார்த்து மகிழ்கின்றோமே.

  உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. பூக்கள் பற்றிய தகவல்களும், படப்பகிர்வுகளும் என்னை வெகுவாய் கவர்ந்தது.

  கிளிப்பூக்கள் மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது.

  இக்கட்டுரைக்கு பரிசாக உங்களுக்கு ஒரு ‘பூங்கொத்து’.

  ReplyDelete
 8. ரம்யம்...பூக்களால் நிறைந்திருக்கிறது.இதுநாள்வரை அறியாத அழகான பூக்கள்.கிளிப்பூக்கள் இணையங்களில் கண்டிருக்கிறேன்.அது பற்றிய விபரங்கள் அருமை!

  ReplyDelete
 9. பூக்கள்தான் எத்தனை அழகு.. எத்தனை விவரங்கள் தந்திருக்கிறீர்கள்.
  ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ கார்ட்ஸ் என்கிறார்கள்.
  எப்படித்தான் ஞாபகம் வச்சுகிட்டு மலருதோ..

  ReplyDelete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வாருங்கள் சத்ரியன்.

  பூங்கொத்தை மிக்க நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன்.

  ReplyDelete
 12. வாருங்கள் ரிஷபன்.

  ஆமாம் இயற்கையின் படைப்பில் பூக்கள் எப்படி எல்லாம் எம்மை வியக்க வைக்கின்றன...

  ReplyDelete
 13. அழகுடன் மலர்ந்து மணம் பரப்பி
  மனம் நிறைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ. அழகழகாய்ப் பார்த்து ரசித்தேன் உங்கள் பதிவில். அருமை. (அதுசரி... எள்ளுப் பூ நாசி பத்தி பேசிப் பேசித் தீராது-ன்னு ஒரு பாட்டுல வருதே... அது எப்படியிருக்கும்?) உங்களுக்கு என் பாராட்டுக்களும், இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 16. வாருங்கள் இராஜராஜேஸ்வரி.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் புதுவருட வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. வாருங்கள் கணேஷ்.

  பூக்களைப் பார்த்து ரசித்ததற்கு நன்றி.

  ஆகா... எங்களுக்குத் தெரிந்துவிட்டதே நீங்கள் மனைவியைப் பார்த்துப் பாடியது :))

  சங்ககாலப் பாடல்களில் கவிஞர்கள் எள்ளுப் பூவை பெண்களின் நாசிக்கு ஒப்பிட்டு பாடி இருப்பதும் உங்களுக்குத் தெரியும் என்பதும் எங்களுக்குத் தெரிந்துவிட்டதே :)

  மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 18. நல்ல ஒரு ஆக்கம் சகோதரி. காந்தள் மலரைத்தான் கார்த்திகைப் பூ என்கிறார்களோ! குறிஞ்சிப் பூக்கள், செண்பகம், அனிச்சம் பூ, என்ற பலவற்றைப் படங்களில் பார்த்தது. மகிழ்ச்சி வாழ்த்துகள் சகோதரி. இன்று தான் வந்துள்ளேன். ரமணிசாரின் இடுகை மூலம். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 19. வாருங்கள் kavithai (kovaikkavi)

  உங்கள் முதல்வருகைக்கு மிக்க நன்றி.

  ஆமாம். காந்தள் மலரைத்தான் கார்த்திகைப் பூ என்கிறார்கள்.

  ReplyDelete
 20. பூக்கள் படங்களால் கண்களுக்கு விருந்து
  வைத்து விட்டீர்கள் மாதேவி.

  கிளிப்பூ அருமை.
  நாகலிங்கபூ ஒ அற்புதம்!

  ReplyDelete
 21. பூத்து நிற்கும் பூக்களின் உலகம் மனதில் மகிழ்ச்சி பூக்கச்செய்தத்து,,

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 22. வணக்கம் மாதேவி. எனக்கு நீண்ட நாட்களாக ஒரு அவா உண்டு. இலங்கையில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் சினேகிதம் வேண்டும். அவர்களின் கலாச்சாரம், உணவு வகைகள், பண்பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நான் ஆர்வம் கொண்டவன். தங்களின் சின்னு ரேஸ்ரி வலைப்பூவை நான் படித்தேன். அனைத்து பக்கங்களையும் என் Bookmarkல் சேமித்துக் கொண்டேன். இன்னும் சில நாட்களுக்கு எங்கள் வீட்டில் யாழ்ப்பாண உணவு வகைகள் தான். மிக்க நன்றி. அவ்வப்போது எனது வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டங்களும் விட்டுச் செல்லுங்கள். எனக்கு இலங்கையிலிருந்து ஒரு தோழி கிடைத்தது மிக்க மகிழ்ச்சியே.

  ReplyDelete
 23. பூ மணம் கமழ்ந்து, பூப்பூக்கும் ஓசையை ஆசையுடன் கேட்டபடி, வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  அன்புடன் vgk 24.02.2012

  ReplyDelete
 24. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/

  ReplyDelete
 25. வலைச்சரத்தின் வாயிலாகவே தங்களின் வலைப்பூவை காண நேர்ந்தது..

  கிளிப்பூ.. அதிசயம்! அழகு..! ஆச்சரியம்..!

  பகிர்வுக்கு நன்றி..!!

  ReplyDelete
 26. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 27. வருகை தந்த
  கோமதி அரசு
  இராஜராஜேஸ்வரி
  ஆரூர் மூனா செந்தில்
  விச்சு
  சம்பத்குமார்
  வை.கோபாலகிருஷ்ணன்
  கீதமஞ்சரி
  தங்கம் பழனி
  கூகிள்சிறி .கொம்.

  அனைவரின் வருகைக்கும் மகிழ்கின்றேன்.மிக்க நன்றி.

  ReplyDelete
 28. மலர்களைப் பற்றிய தகவல்கள் படங்கள் மனதைக் கவர்கிறது. காந்தள் என்பதே கார்த்திகைப்பூ என்பதை இப்போதே அறிந்தேன்.
  நான் "மோப்பக் குழையும் அனிச்சம்" படிக்கும் போது எனக்குப் 11 வயது, சத்தியமா எங்க வாத்தியார் அனிச்சம் என்றால் தொட்டச் சிணுங்கி எனத் தான் விளக்கம் சொன்னார்; எங்க பாடசாலையிலும் மழைக்கு செழித்து வளர்ந்து இளவூதா நிறத்தில் தும்புக் கற்றை போல் பூத்திருக்கும், அந்தக் கொடியுடன் தொட்டு விளையாடுவதே அந்தக் காலத்தில் ஒரு ஆனந்தமே!
  உங்கள் பதிவு பார்த்தே தெளிந்தேன். இத் தெளிவுக்கு 47 ஆண்டுகள். இணையத்தின் ஒப்பற்ற சேவை!!
  நன்றி!
  கொன்றைப் பூவுக்கு ஈழத்துச் சின்னத்தம்பிப் புலவர் பாடிய பாடல்!
  "பொன் பூச்சொரியும் பொலிந்து செழுந்தாதிறைக்கும்
  நன்பூதளந்தோர்க்கு நன்நிழலாம்- மின்பிரவை
  வீசுபுகழ் நல்லூரான் வில்வராயன் கனக வாசலிடைக்
  கொன்றை மரம்.

  சுவாமி விபுலாந்தர்... ஈசனுவக்கும் இன்மலர்கள் எனும் பாடல் தொகுப்பில்
  "வெள்ளை நிறமல்லிகையோ? வேறெந்த மாமலரோ?
  வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
  வெள்ளை நிறப்பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல
  உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது...
  இப்படி பல பாடல்கள்
  எல்லாம் உங்கள் பதிவைப் படித்ததும் நினைவில் வந்தது.

  ReplyDelete
 29. கிளிப்பூ மிக ஆச்சரியமானது. இதை அழிவிலிருந்து காக்கவேண்டும்.
  படம் தேடியிட்டதுக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete