ரோஜா மலரே ராஜகுமாரியில் தொடங்கி ரோஜா ரோஜா ....ரோஜா ரோஜா கண்ட பின்பே காதல் கொண்டேன்என சிலிர்த்து பல்வேறு பாடல்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றது ரோஜா.
பூவை விரும்பாதவர்கள் இருக்கின்றார்களா? காதலை வெளிப்படுத்த பெரும்பாலும் சிவப்பு ரோஜாக்களின் மலர்க் கொத்து பயன்படுத்தப்படுகிறது. திருமண சூட்டில் ரோஜா இடம் பிடித்துவருகின்றது. அன்பின் பரிசாக ரோஜா மலர்கள் பரிசளிக்கபட்டு வருகின்றன.பாரம்பரியமாக நன்றி கூறுவதற்காகவும் ரோஜா மலர்களை பரிசாக அளித்து வந்திருக்கிறார்கள். ரோஜாக்கள் பல ரகங்களில் அமைந்து காண்போரை தம்வசம் இழுத்து பரவசத்தில் ஆழத்துகின்றன.
தமிழர் அக வாழ்விலும் புற வாழ்விலும் பூக்கள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. இறைவழிபாட்டிற்கு மலர்கள் அர்ச்சிக்ப்படுகின்றன. 'பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார்...' என நாயனார் பாடினார். தமிழர் கலாசாரத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை பூக்கள் பங்கு வகிக்கின்றன. பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மலர் அலங்காரம் கலையாக மிளிர்கின்றது. இலை தழை காய்ந்த தடிகள் இலைகளைக் கொண்டு அலங்கரிக்கும் இக்பானா அலங்காரமும் பிரசித்தமானது.
காதலின் சின்னமாக பத்து மலர்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன என்கிறார்கள். அதனுள் முதலிடம் சிகப்பு ரோஜாவிற்கு உள்ளது.
Rosacae குடும்பத்தைச் சார்ந்தது. ஆண்டு முழுவதும் பூக்கக் கூடியது. கொடியாகவும் மரமாகவும் வளரக் கூடியது. 100ற்கு மேற்பட்ட வகைகளுள் பல வித வண்ணங்களும் இவ் இனத்தில் இருந்தன. தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட சாரந்த இனங்கள் உருவாக்கப்படுள்ளன.
பூர்வீக இனத்திலிருந்து ஒட்டப்பட இனங்கள் பல உருவாக்கப்பட்டன. அழகினாலும் நறுமணத்தினாலும் பலரும்; ரோஜாவை விரும்பி வளர்க்கின்றார்கள். காட்டு ரோஜாக்கள் பல நிறங்களில் உள்ளன.
ரோசா ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட லத்தீன் வார்த்தையாகும்.
அத்தர் எனப்படும் நறுமணத் திரவம் ரோஜாவிலிருந்து தயாரிக்கப் பட்டது. ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் தயாரிக்கிறார்கள். 1 கிராம் எண்ணெய் தயாரிக்க சுமார் 2000 பூக்கள் தேவைப்படுகின்றன. ரோஜா இதழ்களின் சாறிலிருந்து ரோஜாப் பானகம் தயாரிகப்படுகிறது. இது பிரென்ஞ் மக்களிடையே பிரபலமானது.
Rose water, rose essence கேக் புடிங்,சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பழம் ரோஜாவின் இடுப்பு என அழைக்கப்படுகின்றது. பழக்கூழ்ப் பாகு செய்யப்படுகின்றது.
இதில் அடங்கியுள்ள விற்றமின் 'சீ' க்காக தேநீரில் காய்ச்சப்படுகின்றது
இளம்சிவப்பு ரோஜாக்கள் நன்றி சொல்வதற்காகவும் சில கலாச்சாரங்களில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
மஞ்சள் ரோஜா மகிழ்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. உற்சாகப்படுத்துவதற்காக மஞ்சள் நிற மலர்கள் பரிமாறப்படுகின்றன. நட்புணர்வையும் வளர்க்கின்றது.
செம்மஞ்சள் ரோஜா மதிப்பு அளிக்கும் அடையாளமாக விளங்குகிறது. ஒருவரை மதிப்பளிக்க செம்மஞ்சள் ரோஜாவை வழங்குகிறார்கள்.
வெள்ளை ரோஜா தூய்மையின் அடையாளமாக விளங்குகிறது. கௌரவம் மதிப்பையும் தருகின்றது. தொடக்க காலத்தில் காதலின் குறியீடாகவும் பயன்படுத்தினர்.
வெள்ளை ரோஜாக்கள் மரணமடைந்தவர்களுக்கு வைத்து வணங்கப்பட்டும் வருகின்றது.
ஊதாநிற ரோஜா ராஜ குடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்திருக்கின்றது.
![]() |
http://www.floristworks.com.au/flowers/black-roses/Red-roses-bouquet.jpg |
ரோஜா இதழ்களை நீரில் இட்டுக் குளிப்பதால் நறுமணம் கிடைப்பதுடன் சர்மநோய்களுக்கும் நல்லது என்கிறார்கள்.
பழங்கால கிரேக்கர்களும் உரோமானியர்களும் ரோஜாவை தமது காதல் தேவதைகளான வீனஸ். அபிரோடைட் இன் அடையாளம் எனக் கருதினார்கள்.
ரோம் நகரத்தில் இரகசிய விவாதங்கள் நடக்கும்போது அறையின் வாசலில் ஒரு காட்டு ரோஜா வைக்கப்பட்டது. 1800 களில் ஐரொப்பாவில் சீனாவிலிருந்து பூக்கும் ரோஜாக்களின் அறிமுகத்துடன் ரோஜா வேளாண்மை ஆரம்பித்தது.
இங்கிலாந்தின் தேசிய மலர் ரோஜா.
ரோஜா வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அமெரிக்காவின் 'டெக்ஸாஸ் இன் டைலர்' அமெரிக்காவின் ரோஜாத் தலைநகர் என்ற புனைபெயர் இதற்கு உண்டு. ஓவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 'டெக்சாஸ்' ரோஜாத் திருவிழாவை நடாத்துகிறது. இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும்.
இலங்கையில் நுவரெலியா மாவட்டம் ரோஜாவிற்கு புகழ்பெற்றது. இங்கு ரோஜாத்தோட்டங்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளன..
இது Albrighton, Shrophshire.விலுள்ள David Austin Rose Gardens
மாதேவி
வசீகரிக்கும் அழகு...
ReplyDeleteவாருங்கள் திண்டுக்கல் தனபாலன்.
Deleteஉங்கள் ரசனைக்கு மகிழ்ச்சி.
வருகைக்கு மிக்க நன்றி.
அழகான மலர்கள்.
Deleteஅற்புதமான விளக்கங்கள்.
மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள்.
உங்கள் கருத்து மகிழ்ச்சியைத் தருகின்றது.
Deleteவருகைக்கு மிக்கநன்றி வை. கோபாலகிருஷ்ணன்.
அருமையான பதிவுகள் ஆனால் ? இதை படியுங்களேன் http://kaviyazhi.blogspot.com/2012/08/blog-post_30.html
ReplyDeleteநன்றி கவியாழி கண்ணதாசன்.
Deleteரோஜாப்பற்றிய அருமையான அரிய தகவல்கள் .
ReplyDeleteஇலங்கை வந்த போது நுவரேலியா வந்தோம், ஆனால் ரோஜா தோட்டத்தை பார்க்கவில்லை. அதை நீங்கள் பூர்த்தி செய்து விட்டீர்கள் பார்த்து மகிழ்ந்தேன் மாதேவி ரோஜா தோட்டத்தை. நன்றி.
வாருங்கள் கோமதி அரசு.
Deleteஉங்கள் ஊட்டியிலும் அழகிய தோட்டம் இருக்கின்றதே . ஊட்டிப் பயணத்தில் பார்த்துக் களித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
ரோஜா, வெள்ளை ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா
ReplyDeleteஎத்தனை பெயர்கள்? நிறைய தகவல்கள்.
பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !
"What's in a name? That which we call a rose
By any other name would smell as sweet."
-William Shakespeare (Romeo and Juliet)
அழகிய கருது்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
Deleteவருகைக்கு மிகவும் நன்றி தி. தமிழ் இளங்கோ.
ரோஜா.... ரோஜா.....
ReplyDeleteமனதைக் கொள்ளை கொண்ட பகிர்வு! எத்தனை அழகு இப்பூக்கள்!
ஆமாம் வெங்கட்.
Deleteவருகைக்கு மிக்க நன்றி.
வண்ணத்தாலும் மணத்தாலும்
ReplyDeleteஎண்ணம் மகிழ மனம் நிறைத்த
அருமையான அழகிய பதிவுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteஅழகு ரோஜாக்களை பகிர்ந்து மனதை கிறங்கடித்து விட்டீர்கள்....எத்தனை மென்மையானது...
ReplyDeleteசுகந்தமான பகிர்வு!
ரசித்து மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி கோவை 2 தில்லி.
ReplyDeleteபூக்களின் ராஜா ரோஜா பற்றிய விபரம் பயன் கொண்டது.
ReplyDeleteமிக நன்று. படங்களும் அழகு.
நன்றி மாதேவி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ரோஜாவில் இத்தனை வகைகளா?
ReplyDeleteஅடாடா... இத்தனை நாள் இதைப் பாக்காம மிஸ் பண்ணிட்டேனே... ஒவ்வொரு ரோஜாப் பூவும் மனசை பறிக்குது. எத்தனை நிறங்கள்! எத்தனை அழகு!
ReplyDeleteபதிவுகள் மிக ரம்யமாக இருக்கு மாதேவி !
ReplyDeleteகோவை கவி
ReplyDeleteவிமலன்
வருகைக்கு மிக்க நன்றி.
பாலகணேஷ்.
ReplyDeleteகலாகுமரன்.
மகிழ்கின்றேன்.
நன்றிகள்..