Thanks :- en.wikipedia.org |
Thanks:- ta.wikipedia.org |
இரவில் ஒட்சிசனை வெளியேற்றும் தாவரங்கள் அரச மரமும்; துளசிச் செடியும் ஆகும்.
கொம்பஸ் செடி என்று அழைக்கப்படும் திசைகாட்டும் செடி ஒன்று வட ஆபிரிக்க நாட்டில் இருக்கிறது. சில்பியம் லெசினியேட்டம் (Silphium laciniatum)
என்ற செடி. இந்தச் செடி 6 அடி உயரம் வரை வளரக் கூடியது. தண்டின் அடிப்பகுதிகளில் நிறைய இலைகள் காணப்படும். மேலே செல்லச் செல்ல இலைகள் குறைந்து கொண்டே செல்லும்.
Thanks :- |
6000 ஆண்டுகள் வரை வாழக் கூடிய மரங்களும் இருக்கின்றனவாம். இவ்வகை மரங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணப்படுகின்றன. இம் மரங்கள் பிரிஸில் கோர்ன் எனப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 9000 அடிக்கு மேல்தான் இம் மரங்கள் வளர்கின்றன. உலகிலேயே பெரிய மரமும் உயரமான மரமும் இங்குதான் இருக்கின்றன. பெரிய மரம் அடிப்பாகத்தில் 101 அடி சுற்றளவைக் கொண்டதாக இருக்கிறது. உயரம் 272 அடி. சுpல மரங்கள் 366 அடி உயரத்தையும் கொண்டிருக்கின்றன.
உலகின் மிக மூத்த மரம் நோர்வே ஊசியிலை மரமாகும். சுவீடனில் இம்மரம் உள்ளது. இது 9550 ஆண்டுகள் முதிர்ந்ததாம்.
பிரேசில் நாட்டில் jabuticaba என்ற மரம் இருக்கின்றது. இதன் பழங்கள் பிரேசில் திராட்சை என்று அழைக்கப்படுகிறது. திராட்சை போல குலையாகக் காய்ப்பதில்லை. பழங்கள் மரத்தின் தண்டுகளில் காய்க்கின்றன. மரத்தின் அடியிலிருந்து உச்சி வரை அனைத்துத் தண்டுகளிலும் பழங்கள் காய்த்து இருக்கும்.
Thanks :- timanseeuw.wordpress.com |
சிட்டினியில் ஒலிம்பிக் பார்க் அருகாமையில் homebush bay என்ற இடத்தில் உலகப் போரின் போது உபயோகித்த கப்பல் இங்கே அனாதரவாக விடப்பட்டு இருந்தது.
Thanks :- www.mymodernmet.com |
மூங்கில் புளியை முதிரை
நிகழ்வாகை
சேர்ந்தடைந்த காட்டில்
சிறுபறவைக் கூட்டமாய்
வாழ்ந்து வந்தோம் நாங்கள்
காட்டுத் தீ மூட்டும்
கலைதேர்ந்த மேதைகளே
கூட்டுக்குள் கத்தும் எங்கள்
குஞ்சுகளுக்கு இரை தேடி
தூரப் பறந்த துணைவன்
உணவோடு கூடு வருமுன்னே
கொல்லும் நெருப்பள்ளி
போடுவீர்.
பாதை புதிது கவிதைத் தொகுதியில் மு.சடாச்சரன் இக்கவியை தருகின்றார்.
நேற்றும் பத்திரிகைச் செய்தி இலங்கையில் பரந்த மலைக் காடுகளாகத் திகழும் சிங்கராஜ தெனியாயப் பகுதிகளில் 25 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம். யாரோ விசமிகள் வைத்த தீயாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் காட்டு மரங்களை அழிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.காடழித்தலைத் தடுப்போம். மர நடுகையை முன்னெடுப்போம்.
Thanks :- en.wikipedia.org |
Thanks :- o.canada.com |
0.00.0
மரங்கள் பத்தின நிறைய புதுத் தகவல்கள் இப்ப உஙக மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். மரத்தண்டுகள்ல ஆரம்பிச்சு பழங்களா காய்ச்சிருக்கற மரமும் அந்தப் பழங்கள்லருந்து வைன் தயாரிக்கறாங்கன்ற தகவலும்.. அட! உலகப்போர்ல பயன்பட்ட அந்தக் கப்பல் படமும் மிக ரசித்தேன். மரங்களைக் காப்போம்..!
ReplyDeleteதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் மரங்களைப்பற்றிய செய்திகள் படங்கள் எல்லாம் மிக அருமை. கவிதை அருமை.
ReplyDeleteஇயற்கையை போற்றுவோம். வனங்களை காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
மரங்களை வளர்த்து மழை பெறுவோம். கோடையை குளிர்விப்போம்.
நன்றி மாதேவி.
வாழ்த்துக்கள்.
படங்களும் தகவல்களும் அற்புதம்...
ReplyDeleteசிறப்பான கருத்துகளுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி...
கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி தந்துப்போகும்
ReplyDeleteஅற்புதமான பகிர்வு
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள் -ரம்யமாக
ReplyDeleteஉலக வன தினத்தைக்கொண்டாடிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
கண்ணுக்கு இனிமையான படங்களுடன் கருத்துக்கு இனிமையான பதிவு! இதுவரை தெரியாத விஷயங்கள்! வாழத்துக்கள் நண்பரே!
ReplyDeleteசிறப்பான பதிவு. மரங்களின் தண்டுகளில் கூட பழங்கள் காய்ப்பது இது வரை பார்த்ததில்லை.
ReplyDeleteசிறப்பான படங்களும் பகிர்வும்.
ReplyDeleteவலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteபதிவு மிக நன்று சகோதரி.
ReplyDeleteபடங்களும் நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அன்புடையீர், வணக்கம்.
ReplyDeleteதங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html
மிக்க நன்றி. மகிழ்கின்றேன்.
Delete