Tuesday, June 25, 2013

பனி விழும் மலர் வனம்....

பூக்களின் வண்ணங்கள், சுகந்த மணம், அழகு என்பன எம்மை அதன் பால் ஈர்த்து லயிக்கச் செய்கின்றன. பூக்களின் நறுமணங்களால் கவரப்பட்டு தேனீக்கள், வண்டுகள், பூச்சிகள், குருவிகள் அவற்றில் தேன் அருந்த வருகின்றன.

மகரந்த சேர்க்கையை பரவலாக்கி தமது இனத்தைப் பெருக்க தாவரங்கள் பூச்சிகளை கவரும் விதமாக பலவண்ணப் பூக்களையும் நறுமணத்தையும் உருவாக்குகின்றன. இதனால்தான் நாமும் மலர்களில் கிறங்கிப்போய் நிற்கின்றோம்.


இரவில் மலரும் மல்லிகை முல்லை மலர்கள் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் அதீத வாசனையைத் தருகின்றன.  பூ இதழ்களில் உள்ள எசன்ஸ் ரசாயனப் பொருள் அதீத மணத்தைத் தருவதால் தொலைவில் உள்ள பூச்சிகளும் கவர்ந்து வருகின்றன.


மஞ்சள், வெள்ளை, சிவப்பு, நீல, பலவண்ண மலர்கள் பூத்து நிரம்பிய மலைகள், ஓக்கிட் காடுகள், பூந்தோட்டங்கள் அழகில் மயக்குகின்றன.


குறிஞ்சி மலைகள், பிச்சி, ரோஜா, என ரம்யமான இனிய பூக்களின் மணம் காற்றில் மிதந்து வந்து மனதிற்கு இதம் தருகின்றன.



மூதூர் பிரதேசத்தில் மல்லிகைத்தீவு என்று அழைக்கப்படும் இடம் இருக்கின்றது.

நானிலங்கள் மலர்களின் பெயர்களால் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

உலகில் அதிகமாக பூக்கள் மலர்வது நெதர்லந்து நாட்டில்தான்.


வசந்த காலத்தில் இலைகள் புதியதாகத் தோன்றி வண்ண மலர்களைப் போல தோற்றம் தருகின்றன.


புதிய மாவிலைக் கொழுந்து இலைகள் சிவந்த நிறத்தை உடையனவாக தோன்றுகின்றன. பொதுவாக கொழுந்தான புதிய இலைகள் குருத்துப் பச்சை, சிவப்பு ஓரென்சு நிறங்களாக இருக்கின்றன.

இவற்றில் கரோட்டினொயிட் எனும் நிறமிகள் காணப்படுவதால் இலைகள் அவ்வாறு தோன்றுகின்றன. இந்த நிறங்கள் பூச்சித் தாக்கத்தையும் தடுக்கின்றன. இதனால் கொழுந்துகளுக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. சூரிய ஒளியின் தாக்கத்தையும் குறைக்கின்றது.

வசந்தகாலத்தில் மலர்கண்காட்சிகள் நடாத்தி மகிழ்கிறார்கள்.


பூக்களின் மணங்கள் ஐந்து வகையாக இருக்கும் என்கிறார்கள் தாவரவியல் வல்லுனர்கள். இன்டோலாயிட் மணங்கள், அமினொயிட் மணங்கள், பென்சொலாட் மணங்கள், மெழுகு மணங்கள், டெரபினோயிட் மணங்கள் எனப்படும். அனைத்துத் தாவரங்களின் பூக்களும் இவற்றில் அடங்கும்.


இலங்கைக்கு உரித்தான இனங்களாக 1025 பூக்கும் தாவரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிங்கராச வனத்தில் மட்டும் 820 பூக்கும் தாவர இனங்கள் இருக்கின்றன.


இலங்கையில் பெரதேனியா, ஹக்கல, கம்பஹாவில் உள்ள ஹெனரத்கொட ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்கள் உள்ளன.


இந்த மூன்றும் பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஹெனரத்கொடவில் 1876 ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்காவே பிரிட்டிஸ்காரரால் ஆரம்பிக்கப்பட்ட கடைசி மலர் வனம் ஆகும்.


மிரிஜவில Mirijjawila எனும் இடத்தில் வரட்சி மண்டல பூந்தோட்டம் உள்ளது. இது கொழும்பு கதிர்காமம் பாதையில் ஹம்பந்தோட்டவில் உள்ளது. இடது புறம் மத்தள சர்வதேச விமான தளமும், வலது புறம் ஹம்பந்தோட்ட துறைமுகமும் உள்ளன. 300 ஏக்கர் விஸ்தாரமுள்ள இப் பூங்காவனம் இன்னும் வளர்ச்சிடைந்து கொண்டிருக்கிறது.

இயற்கையை ரசிப்போம் வாழ வழிவகுப்போம். வண்ணமலர்களையும் நாட்டி மனதுக்கு புத்துணர்சி பெறுவோம்.

மாதேவி

11 comments:

  1. மனம் கவரும் அழகிய மலர்கள்...

    வாழ்த்துக்கள்... தகவல்களுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி தனபாலன்.

      Delete
  2. கிறங்கிப்போய் நிற்கின்றோம்
    பனிவிழும் மலர்வனத்தில்....!

    ReplyDelete
  3. வண்ணமலர்களின் படங்களோடு பூஙகாக்கள் பற்றிய தகவல்கள் அங்கு வருவோருக்கு பயன்படுவன.
    இந்த புதிய வடிவமைப்பில் (DESIGN) கருத்துரைப் பெட்டியை (COMMENTS BOX) கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி.

      சிரமத்துக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

      Delete
  4. பனிவிழும் மலர் வனம் மிக அழகு.
    ரம்யம்.
    இயற்கையை ரசிப்போம் வாழ வழிவகுப்போம். வண்ணமலர்களையும் நாட்டி மனதுக்கு புத்துணர்சி பெறுவோம்.//

    நிச்சியம் ரசிப்போம், வாழவழி வகுப்போம், வண்ணமலர்களை நாட்டி மனதுக்கு புத்துணர்ச்சி பெறுவோம்.

    ReplyDelete
  5. Beautiful Flowers ! ;)))))

    கிறங்கிப்போய் நிற்கின்றோம்
    பனிவிழும் மலர்வனத்தில்....!

    THANKS FOR SHARING ! ALL THE BEST !!

    ReplyDelete
  6. இயற்கையை ரசிப்போம் வாழ வழிவகுப்போம்.
    இதில் மனம் மயங்காதார் யார்!.
    பதிவு நன்று. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. பூக்கள் பற்றி பல விஷயங்களை சொல்லியுள்ளீர்கள்... மணம் பரப்பும் பூக்கள்... அழகு.

    ReplyDelete
  8. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete