உலகில் வாழும் பறவை இனங்களில் அறிவுத் திறன் மிக்கது காகம். இவற்றில் உள்ள சிறப்பு அம்சம் எந்தப் பருவநிலையுள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை.
தென்னமெரிக்கா மற்றும் பெருங்கடலுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காணப்படும் பறவை இது.
குட்மோனிங் இன்னுமா தூங்குகிறாய் |
Carvidae (கார்விடே) குடும்பத்தைச் சார்ந்தது இது. இவற்றில் நாற்பது இனங்கள் இருக்கின்றன. பொதுவாக கரிய நிறம் கொண்டவை.
ஆனால் அரிதாக வெண் நிறக் காக்கைகளும் இருக்கின்றன.
![]() |
Thanks :- www.tumblr.com |
சுற்றுப்பற சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு இதற்கு இருக்கின்றது. 'தோட்டி' என்ற பெயரும் இதற்கு உண்டு.
வயல்களில் உள்ள பூச்சிகளையும் உண்பதால் 'உழவர்களின் நண்பன்' என்றும் அழைக்கிறார்கள்.
கொக்குகளுடன் நண்பனாக வயலில் பூச்சி புளு தேடல் |
ஆசியாவில் பெரும்பாலும் இருப்பவை கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியவையே.
அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பிய இனங்கள் பலவும் இருக்கின்றன.
தமிழர் நம்பிக்கையில் விரத நாட்களில் காக்கைக்கு உணவிட்டு உண்ணும் பழக்கம் இருக்கின்றது. அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களும் காக்கைகளை கலாசாரத்தின் சின்னமாகவும் மூதாதையரின் அம்சமாகவும் கருதினார்கள்.
பஜ்ஜி சுட்ட ஓர்நாளில் அடுப்பில் வேகும் போதே மணத்தில் அடுக்களை பல்கனியில் வந்து கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள் இருவர். ஒருவர் பஜஜியுடன் ஓடிவிட்டார் மற்றவர் சாப்பிடுகின்றார். |
சிவ பூசைக்காக அகத்திய முனிவர் கொண்டு வந்து கங்கை நீரை வைக்க விநாயகர் காகமாக உருவெடுத்து வந்து கமண்டலத்தைத் தட்டிவிட நீர் வழிந்து ஓடி காவிரி ஆறு ஆகியது என புராணங்கள் சொல்கிறது. காகங்கள் பற்றி இலக்கியத்திலும் வந்திருக்கின்றன.
தேங்காய் சாப்பிட ஆசையாக இருக்கு எனக்கும் தாவேன் |
'கில்காமேஸ்' என்ற நூல் காகங்கள் பற்றியது உலகின் பழமையான நூலாகக் கருதப்படுகின்றது. ஐரிஸ் புராணங்களின் படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான 'மாரிகின்' என்ற கடவுளாகக் கருதப்படுகின்றது.
சனிபகவானின் வாகனமாகவும் கொள்கிறார்கள்.
மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாக கருதுகிறார்கள். பின்னர் வட அமெரிக்கா ஆபபிரிக்கா ஐரோப்பா அவுஸ்திரேலிய நாடுகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.
காக்கைகள் மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும் திறன் உள்ளவையாக இருக்கின்றன. இவை உணவைப் பகிர்ந்து உண்ணும் குணத்தை உடையன.
இருபது வருடங்கள் வரை உயிர் வாழக் கூடிய பறவை.
கூட்டாக உண்டு மகிழ்வோம் |
பெண் காகங்கள் மூன்று வருடத்திலும், ஆண்காகாங்கள் ஐந்து வருடத்திலும் பருவமடைந்து கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.
![]() |
Thanks :- commons.wikimedia.org |
பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தின் பின்பே முட்டை இடுகின்றன. முட்டைகள் நீல பச்சைப் பின்னணியில் மண்நிறப் புள்ளிகள் கொண்டவையாக இருக்கும். நாலு ஐந்து முடடைகள் இடும்.
![]() |
nature.gardenweb.com |
அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த காகம் அதி கூடுதலாக முப்பது வருடங்கள் வாழ்ந்ததாக சொல்கின்றார்கள்.
கிளிகளைப் போல் காகங்களும் மனிதக் குரலில் பேசும் திறன் பெற்றவை எனச் சொல்லப்படுகிறது.
சொல்லேன் என்ன வாங்கித்தர ஜஸ்கிறீமா சோடாவா மைலோவா. |
அமெரிக்க மீன்வள உயிரினங்கள் சேவை மையத்தில் தகவலின் படி
ஹவாயன் காகம், மரியனா காகம் உலகின் அழிந்து போன உயிரினங்களின் வகைகளில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனவாம்.
இலங்கையில் 'காக்கைத் தீவு' என்ற இடமும் இருக்கின்றது.
பாலர் பாடல்களில், கதைகளில் காக்கையாருக்கு முக்கிய இடம் உண்டு.
'அண்டங்காக்கா கொண்டைக்காரி'... என்று பாடத் தோன்றுகிறதா.
நவீன கால புத்திசாலிக் காக்காவை பாருங்கள் ..........
0.0.0..0.