நான்கு பக்கமும் தண்ணீர் சூழ சிறிய தீவாக அமைந்திருப்பது இலங்கை. இத் தீவிற்குள் ஒரு குட்டித் தீவாக கொழும்பு மாநகரில் அமைந்துள்ளது Beira lake..
Beira Lake இல் அமைந்துள்ள இந்த Seema Malakaya கோயிலை 1985ம் ஆண்டு திரு Geoffrey Bawa வடிவமைத்தார்.
இது சிறிலங்கன், தாய், இந்தியன், சைனா கட்டடக் கலைகள் கலந்த கலைநுட்பம் நிறைந்த சிறிய மண்டபம். கலை நயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இரண்டு மணடபங்கள் அடங்குகின்றன. முதலாவதும் பெரியதுமானது மக்கள் கூடும் இடமாக அமைந்துள்ளது. மற்றது பெளத்த பிக்குகளின் பயிற்சி மற்றும் தியான மண்டபமாக இருக்கின்றது.
வாயிலில் பாத பகொடா Pada Pagoda
முன் முகப்பில் புத்தரின் சயன உருவம் சிலையாக வடிக்கப்பட்டு வரவேற்கிறது. மண்டப மரவேலைப்பாடுகள் வியக்க வைக்கின்றன.
மரத்தாலான அழகிய மண்டபம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்து நிற்கிறது.
மிக அழகிய மண்டபத்தின் தோற்றம் தூரத்தே வரும்போதே வா வா என அழைத்து வரவேற்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரதானமாக வந்து பார்த்துச் செல்லும் பிரசித்தமான இடமாக மிளர்கின்றது.
சாதி ,மத வேறுபாடின்றி மக்கள் பலரும் வந்து தர்சித்துச் செல்கின்றார்கள். பிரபல தொழில் அதிபர் அமீர்முசாஜி அவர்கள் வெண்சிங்கச் சிற்பத்தை வழங்கி இருக்கிறார்.
பிராத்தனை மண்டபத்துடன் நூதனசாலையும், நூல்நிலையமும் அமைந்துள்ளன. சுற்றிவரும் பாதையில் இருந்து வலதுபுறம் மரப்பாலம் அமைத்து சத்தியத்தின் பொக்கிச சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இருபுறமும் நீர் ஓட சிறிது தூரம் நடந்து சென்று மண்டபத்து வாசலை அடைகின்றோம்.
வாத்துக்கள் ஒரு புறம் நீச்சலடிக்கின்றன. கூளக்கடாக்கள் பறந்து திரிகின்றன. இரு கைகளையும் நீட்டி அவற்றைப் பிடிக்க தோன்றுகிறது.
குளிர் காற்று நம்மை சிலிர்க்க மண்டப வாயிலின் இருபுறமும் உள்ள வெண்சிங்கங்களின் அழகில் கிறங்கி நிற்கின்றோம்.
மண்டப வாயிலின் நடுநாயகமாக அரைசந்திர வட்டக்கல் அமைந்திருந்து வரவேற்கின்றது.
அதை ஒட்டி பெண்சிலைகள் ....
......இருபுறம் நிற்கும் படிகளில் ஏறிச் சென்று மண்டபத்தை அடையலாம்.
மரவேலைப்பாட்டு மண்டபத்திலிருந்து உள்ளழகையும், வெளியேதெரியும் ......
.........ஏரியினதும் கொழும்பு மாநகரினதும் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.
உள்ளே நடுநாயகமாக கண்ணாடிப் பெட்டிக்குள் அழகிய புத்தர் சிலை.
இருபுறமும் உருவங்கள். கல்லால் ஆன யானைகள்,
பழையகால கற்சிற்பம் ............
.........என பலவும் இருக்கின்றன.
வணங்கி வெளியே வருகின்றோம். வெளியில் மண்டபத்தைச் சுற்றி அழகிய பாதை.
தியானமிருக்கும் கௌதம புத்தரின் வெண்கலச் சிலைகள் பலவித முத்திரைகளுடன் வரிசையாக பாதையைச் சுற்றி அமைந்திருந்து நம்மையும் கலை நயத்தில் திளைக்க வைக்கின்றன.
பாதையிலிருந்து சுற்றிவர இருக்கும் கட்டிடங்கள், .......
பசிய உயர்ந்த மரங்கள். ஓடும் நீர் அருகே இருக்கும் குட்டித் தீவுப்பூங்கா, தூரத்தே வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள், ....
நீரில் நீந்தும் வெண்நிற வாத்துக்கள், நீர்க்காகங்கள், பறவைகள், காகங்கள்
என சுற்றுப்புறம் நம்மை ஒரு வெளி உலகிற்கு அழைத்து மகிழ்வைத் தருகின்றன.
ரசித்தபடி பாதையைச்சுற்றி வந்து மீண்டும் முகப்பிற்கு வருகின்றோம். முகப்பின் இடதுபுறம் பாதைக்கு மேலே படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.
ஏறிச் சென்று மரத்தின் கீழ் அமைந்துள்ள பெரிய புத்தர் சிலையை வணங்கலாம்.
பிள்ளையாரும் ஒருபுறம் சிறிய கட்டிடத்தில் வீற்றிருக்கிறார்.
அனுராதபுரகால பாரிய சிலையும் ஒன்று உயர்ந்து நிற்கிறது.
மறுபுறம் முருகன் ஆறுமுக ஸ்கந்தனாக,
இன்னோர் புறம் கோழி வாகனத்தின் மேல் கிருஷ்ணர், கோழி ஒன்றும் கூடவே தூங்குகின்றது.
வைரபர்,..
இவற்றையெல்லாம் கண்டு களித்துக் ......
...கீழே இறங்கி மரப் பாதையால் வெளிவந்து லேக் ஓரமாக பாதையில் நடக்கின்றோம்.
Beira Lake இல் உள்ள சீமா மாலகய கோவிலைப் பற்றிய வீடியோவைக் கீழே காணலாம். Uploaded by safarifox 2010.
அடுத்து லேக்கையும் குட்டிப் பூங்காவையும் கண்டு களிக்க வாருங்கள்....
அழகான படங்கள் + விளக்கம்..
ReplyDeleteநல்லதொரு இடத்தை அறிமுகப்படுத்தித் தந்தமைக்கு மிக்க நன்றி
நல்லதொரு இடம் எனக் கூறுகின்றீர்கள் மகிழ்கின்றேன்.
Deleteவருகைக்கு நன்றி சிட்டுக்குருவியின் ஆத்மா.
இலங்கைக்கு ஒரு முறை செல்லவேண்டும் என்று ஆசை. எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை
ReplyDeleteபடங்களும் விவரணையும் நல்லாருக்கு.
பல இடங்களுக்கும் சுற்றுப் பயணங்கள் செய்யும் நீங்கள் ஒருதடவை நம்நாட்டையும் வந்து பாருங்கள்.
Deleteஉங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும்.
வருகைக்கு மிக்கநன்றி மோகன் குமார்.
மனம் தொடும் படங்களும் அதன் விளக்கங்களும் இனிமை ..
ReplyDeleteமிக்கநன்றி அரசன் சே.
Deleteபடங்களும், தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇடம் உங்களுக்குப் பிடித்திருந்ததா. மிக்கநன்றி கோவை2தில்லி.
Deleteபடங்களும் கூடவே நீங்கள் தந்த விவரங்களும் மிக அருமை மாதேவி.
ReplyDeleteமகிழ்கின்றேன் வெங்கட்.
Deleteவருகைக்கு மிக்கநன்றி.
எங்கள் ஊரில் இல்லாததா....என்பதுபோல பிரமிக்க வைக்கிறது படங்கள்....அழகு மாதேவி !
ReplyDeleteஆமாம் ஹேமா. எங்கள் குட்டித்தீவு பலஅழகிய இடங்களை தன்னகத்தே கொண்டு வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்வதில் ஆச்சரியமில்லை.
Deleteமிக்கநன்றி.
அற்புதமான படங்களுடன் மகிழ்சியளிக்கும் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி. கொழும்பில் நீண்ட காலமாக வசித்தும் அங்கு சென்று பார்க்கக் கிடைக்கவில்லை. 1970 களில் மருத்துவ மாணவனாக இருந்த காலத்தில் அசிங்கமான சேற்று நாற்றமடிக்கும் ஏரியாகக் கிடந்தது ஞாபகத்திற்கு வருகிறது. பின்னர் பிரேமதாசா பிரதமராக இருந்த காலத்தில்தான் இவ் ஏரி புனரமைக்கபட்டு பெளத்த ஆலயம் அமைக்கப்பட்டதாக ஞாபகம். உங்கள் பதிவைப் பார்த்த பின் கட்டாயம் சென்று பார்க்க எண்ணியுள்ளேன்.
ReplyDeleteவாருங்கள் Muruganandan M.K.
Deleteஉங்களுக்கு அப்பொழுதில் இருந்தே தெரிந்திருக்கின்றது. நான் கொழும்பு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது அப்பொழுதிலிருந்து அப்பாதையால் செல்லும்போதெல்லாம் சென்று பார்க்க வேண்டுமென நினைத்ததுண்டு. இப்பொழுதுதான் கிடைத்தது.
உங்களுக்குத் தெரிந்திருக்கும் வெசாக் நேரம் மின்விளக்குளால் அலங்கரித்திருக்கும்போது மண்டபம் ரொம்ப அழகாக இருக்கும்.அந்த நேரம் மீண்டும் போய் பார்க்க வேண்டும் :))
மிக்க நன்றி.
மிக நல்ல விபரிப்பு.
ReplyDeleteதங்களோடு சென்று வந்தது போல உள்ளது.
மறு புறம் மாறி தாய்லாந்திற்குள் புகுந்து விட்டேனோ என்ற உணர்வும் தந்தது.
ஓரு தடவை செல்லும் பொது கெட்ட நாற்றம் அடித்ததாகவும் நினைவு போல உள்ளது.
மிக்க நன்றி மாலதி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி கோவைக்கவி.
ReplyDeleteதுப்பரவு செய்யாமல் இருந்திருப்பார்கள். இப்போது துப்பரவாக இருக்கின்றது.
மாலதி ஆகிவிட்டேன் நான் :)) எல்லோருக்கும் வரும் தட்டச்சுப் பிழைதான் குறை நினைக்கவில்லை.
இப்போதும் இன்னொருமுறை பார்த்தேன்.கோழி வாகனத்தில் விஷ்ணு....வித்தியாசமா இருக்கு மாதேவி !
ReplyDeleteHappy new year 2013.
ReplyDeletewell come to my site.
Vetha. Elangthilakam.
மாதேவி, நாங்கள் 6 நாள் சுற்றுலா வந்தோம் கொஞ்சம் தான் பார்த்து இருக்கிறோம், அழகான இடங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலம் கண்டேன்.
ReplyDeleteஅழகு.
வருகைதந்து உற்சாகம் ஊட்டிய
ReplyDeleteஹேமா.
கோவைக்கவி.
கோமதி அரசு.
மிக்கநன்றி.