Sunday, January 3, 2010

ரோஜா மலர்வனம் விக்டோரியா பார்க்கில்

ரோஜாத் தோட்டம் கண்ணில் பட்டு அழைத்தது. தனியே பிரத்தியேகமாக உயர்ந்த இடத்தில் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.


ரோஜாக்கள் என்றாலே எல்லோருக்கும் ஆனந்தம்தான்.

ரோஜாக்களில் சிறிய இனத்தில் தொடங்கி இருபது அடி உயரம்வரை ஏறி வளரக்கூடிய இனங்களும் உண்டு.


நூற்றுக்கு மேற்பட்ட இனங்களுடன் பல வர்ணங்களில் செடிகளும் உள்ளன.
தென் இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து வந்த லத்தீன் சொல் ரோசா என்பது.

நடையும் துள்ளல் நடையாகி, சிரித்து மகிழ்ந்தபடியே உட் புகுந்தோம்.


பல வர்ண ரோஸாச் செடிகள் அழகாகக் கத்தரிக்கப்பட்ட மரங்களிலிருந்து பூத்துக்குலங்கின.

கிளைம்பர் இன ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. சிறிய மினி ரோஜாக்கள் மழலையாய் சிரித்தன.

புதிய இன ரோஜாக்கள் பெரிதாய் மலர்ந்து நின்று வா வா என அழைத்து மனத்தைகிறங்கடித்து நின்றன. இதில் பிங் நிறத்தாலான பூ எங்கள் எல்லோரின் அன்பையும் பிடித்துக் கொண்டது.


மிக நீண்ட நேரம் இனிய நறுமணத்தை நுகர்ந்து இன்புற்றோம்.


ரோஜா என்றதும் கருவி பாலகிருஷ்ணன் புன்னகை என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வந்தது.


புன்னகை
பூக்கள்தான் இந்த
பூவுலகை
நிறைக்கிறது.
ரோஜாக்களின்
புன்னகைதான் அதன்
முட்களை
மறைக்கிறது....

ரோஜாக்களைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றோம்.


பதியமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய பூச்செடிகள்,ஓக்கிற் மலர்கள்,பிகோனியாஸ் கிறீன்கவுஸ் இரண்டினுள்ளே நின்று கவர்ந்திழுத்தது.


விரைந்து சென்றோம் எங்கள் போதாதகாலம் மூடியிருந்தது. கவலையுடன் வெளியே சுற்றி வந்து ஆசையைத் தீர்த்துக்கொண்டு அப்பால் சென்றோம்.


அழகிய மரவேலைப்பாட்டுடன் இளைப்பாறுவதற்கான கொட்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது.

பாதியாக வெட்டப்பட்டிருந்த மூங்கில்குழாய்களில் பசளையிடப்பட்டு சிறிய பூக்கன்றுகள் மரக்குத்திகளின் மேல் இருந்து குடிலுக்கு மெருகு சேர்த்தது. சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தோம்.

சிறீலங்கா வரைபடம் போன்று கட்டப்பட்டிருந்த குளம் சுற்றிவர மரங்கள் நாட்டப்பட்டு குளத்தின் நடுவே நீரினிடையே பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தது.


குளத்தில் சிவப்பு, கறுப்பு பெரிய இனமீன்கள் துள்ளித் திரிந்தன. நடுவே கல்மேல் தாவிச்சென்று படம் எடுத்துக் கொண்டோம் புதிய அனுபவமாக இருந்தது.

மாதேவி

29 comments:

  1. அற்புதமான ரோஜாக்கள்....

    ReplyDelete
  2. ஓவ்வொரு பூவும் தனி தனி அழகு பார்க்க பார்க்க கண்களுக்கு குளிர்சி தருகிறது.

    ReplyDelete
  3. எனக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப இஸ்டம் சூப்பர் கலெக்‌ஷன் மாதவி.

    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  4. அருமையான புகைப்படங்கள் மாதேவி. அழகிய ரோஜாக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. நன்றி அண்ணாமலையான்.

    ReplyDelete
  6. ரோஜாக்கள் என்றாலே அற்புதமும் அழகும்தான்.Mrs.Faizakader நன்றி.

    ReplyDelete
  7. நன்றி அன்புடன் மலிக்கா.

    ReplyDelete
  8. கருத்துக்கு நன்றி சரவணக்குமார்.

    ReplyDelete
  9. அதுதான் நீங்கன்னு இப்பத்தான் தெர்யும் .. கலக்குங்க....

    ReplyDelete
  10. //ரோஜாக்களின்
    புன்னகைதான் அதன்
    முட்களை
    மறைக்கிறது....//

    அருமை.

    ரோஜாக்களின் அழகைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மாதேவி!

    ReplyDelete
  11. அத்தனையும் அழகு.

    பகிர்வுக்கு மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  12. படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.....

    ReplyDelete
  13. அண்ணாமலையான்

    கவிநயா

    ராமலக்ஷ்மி

    Sangkavi

    அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. அட! புகைப்பட கலையிலேயும் பின்றீங்களே மாதேவி...:-) அழகா பட்டு போல இருக்கு ஒன்னொன்னும்..ரொம்ப ஆசையா இருக்கு பார்க்கவே! பகிர்வுக்கு நன்றி! :-)

    ReplyDelete
  15. உங்கள் பாராட்டிற்கு நன்றி சந்தனமுல்லை.

    ReplyDelete
  16. வாவ்.. எவ்வளவு அழகு இந்த ரோஜாக்கள். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத பூக்கள். எவ்வளவு வண்ணங்களில்! நல்ல புகைப்படங்கள் மாதேவி.

    அனுஜன்யா

    ReplyDelete
  17. அனுஜன்யா said...

    "வாவ்.. எவ்வளவு அழகு இந்த ரோஜாக்கள். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத பூக்கள். எவ்வளவு வண்ணங்களில்."

    மிக்க நன்றி அனுஜன்யா.

    ReplyDelete
  18. a rose is a rose is a rose ::))
    கலக்கல் க்ளிக்ஸ்..::)

    ReplyDelete
  19. அற்புதம்!!! ரோஜாக்களை ரசிக்காதார் உண்டா?

    ReplyDelete
  20. அழகான பதிவு.. :-) நல்லா என்ஜோய் பண்றீங்க போல லைஃப்ப .. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. நன்றி. மிக்க நன்றி. மிகமிக நன்றி. பலாபட்டறை.

    ReplyDelete
  22. நன்றி தேவன்மாயம்.

    ReplyDelete
  23. லைபில் இருந்து என்ஜோயை எடுத்தால் அது என்ன ஆகும் ?????

    அம்மாக் கோழி குஞ்சுகளுக்காக என்ஜோய் பண்ணித்தானே ஆகணும்.

    ReplyDelete
  24. அற்புதமான ரோஜாமலர்களை ரசிக்க படைத்தமைக்கு நன்றி, மாதேவி.

    ReplyDelete
  25. வாவ் ஒவ்வொரு பூவும் தனி தனி கொள்ளை அழகு. எனக்கு ரொம்ப் ரொம்ப பிடிக்க்கும். மேலும் மேலும் இந்த மாதிரி நிறய்ய பூக்கள் படங்கள்+ வர்ணனை போடுங்க.
    அப்படியே நம்ம இடத்துக்கும் வந்து உங்க கருத்தை பகிர்ந்துக்க.

    ReplyDelete
  26. வாங்க கோமதி அரசு.
    ரசித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  27. Vijis Kitchen said...
    "எனக்கு ரொம்ப் ரொம்ப பிடிக்க்கும்".நன்றி.

    ReplyDelete