Saturday, February 5, 2011

புதன் நீச்சத்தால் நீச்சமடைந்த வீடு

கண்கவர் விளம்பரங்களில் காட்டும் அழகிய அளவான குடும்பம். அப்பா, அம்மா, குட்டித் தங்கைக்கு ஒரு அண்ணா இனிதே மகிழ்ந்திருக்கும். அம்மா ராஜி படித்தவள். வேலை செய்யும் பெண். அப்பா குமார் ஆபீஸ் செல்பவர்.


இருந்தும் புரிந்துணர்வுடன் வேலையில் பெரும் பங்கெடுத்துக் கொள்வார். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இருவருமே காலைச் சமையல், மதியச் சாப்பாடு இரண்டையும் முடித்துக்கொள்வார்கள்.

அதன் பின்பு அன்புச் செல்வங்களை எழுப்பி தேத்தண்ணிக் கடை ஆரம்பிக்கும். தேநீர் குடித்ததன் பின் ஒவ்வொருவராய் குளித்து காலை உணவு உண்டு மதியச் சாப்பாடு பக்கிங் செய்து பிள்ளைகள் முதலில் பாடசாலை செல்ல இவர்கள் இருவரும் தத்தமது வேலைக்குச் செல்வார்கள்.

வாழ்க்கை இனிய தென்றலாக வீசிக் கொண்டிருந்தது.


இனிதாய் இருந்த குடும்பத்தில் நுழைந்ததே புதன்..

புதன்கிழமை அல்ல.

நீச்சக் கிரகம்.

ஆபீஸில் ராஜியின் நண்பி தனது ஜாதகத்தை சாத்திரியார் ஒருவரிடம் காண்பித்துக் கேட்டதாகவும் நன்றாக பார்த்துக் கூறியதாக ஆசை காட்ட இவளுக்கும் ஆசை தொட்டது. குழந்தைகளின் பலனைப் பார்க்கலாம் என்று..

சிந்தித்துக் கருமங்களை ஆற்ற புத்தியிருக்கும்போது அதை நம்பாது இரண்டு கால் மனிதனொருவன், மூளையே இல்லாத கிரகம் சொல்வதாகச் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கப் புறப்பட்டாள் ஒரு நாளில்.

மகனின் ஜாதகத்தை முதலில் காட்டினாள்.

பார்த்த சாத்திரியார் "மிகவும் நல்ல ஜாதகம் எல்லாம் உச்சத்தில் இருக்கிறது. நன்கு சிறப்புறப் படிப்பான், சித்திகள் பெறுவான், சௌகரியமாக வாழ்வான் ..

ஆனால்…. "

ஆழமாக யோசித்து ஞானிபோலக் கண்ணை மூடி…

"..புதன் நீச்சம் ஒன்று இருக்கிறது. வாழ்க்கையில் அதற்கு ஏற்றதாக பொருத்தமான ஜாதகம் பார்த்துத்தான் பெண் எடுக்க வேண்டும்" என்றார்.


சாத்திரியாரின் கேட் வாசற்படியிலிருந்து கீழே கால் வைக்கு முன்னரே ராஜியின் மூளையில் புதனானது விட்டுப்போகாத ஸ்ரிக்கர் பொட்டாக ஒட்டிக்கொண்டது.

தொடர்கதையாக சிந்தனை போனது புதனின் வழியில்.

தொடர்ந்து வாராவாரம் புதன் கிழமைகளும் வந்தன. நீச்சம்  இப்பொழுதே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது.

வீட்டு வேலைகளும் ஒழுங்கில்லாது போனது.

அதிகாலைச் சமையல், குழந்தைகளின் உணவு எல்லாம் கெட்டன.

சிரிப்பும் கிண்டலும் தொலைந்து போயின.

சஞ்சலமும், ஏக்கமும் அவளை ஆட்கொண்டன.


கணவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துவிட்டான்.

கதைத்து வேலையில்லை.

காலை எழுந்து மலமசல கூடம் போவதிலிருந்து ஆரம்பித்துவிடும்.

மகனுக்கு பொருத்தமான ஜாதகம் உள்ள பெண் கிடைப்பாளா?

கிடைக்காவிட்டால் என்னவாகும். இவனது வாழ்வு சூனியமாகிவிடுமா. வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரம் வசதி கிட்டுமா?

குளிக்கப் போனாலும் இதே சிந்தனைதான்.

குளிக்கப் போவது தாமதமாகும், வேலைக்கு தாமதமாவதால் மேலதிகாரியின் ஏச்சுக் கிடைக்கும் என்பன வேறு கதைகள்.

அவனுக்கு பிள்ளைப் பாக்கியம் கிட்டாது போய்விடுமா?

சமைக்கப் போனால்....

இவனுக்கு ஜாதகம் கெட்ட மனைவி வந்தால் வாய்க்கு ருசியாகச் சாப்பாடும் கிடைக்காது அல்லாடப் போகிறானே என இவள் மனம் இப்பொழுதே அல்லாடத் தொடங்கிவிடும்.

தூக்கு வாளியுடன் காலையில் எழுந்து சாப்பாட்டுக் கடைக்கு செல்ல வேண்டிய கடமை கணவன் தலையில் விழுந்தது.

குட்டி மகனின் எதிர்கால குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது தான் ஒருத்திதான். தன்தலையில்தான் எல்லாம் பொறுத்திருக்கிறது என நினைக்கிறாளா ராஜி.

இல்லை! இல்லை!!

புதனின் தலையில்தான் எல்லாம் என எண்ணுகிறாள்.

மகன் வளர்ந்து யுனிவர்சிட்டி செல்லும்போது அழகிய பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து அவள் பின்னே சென்று அவள் புதன் நீச்சம் கொண்டவளாயின் என்னவாகும்? என்பது அவள் சிந்தனையின் மற்றொரு பக்கம்.


ராஜியைப் போன்ற அம்மாக்கள் ஐயோ பாவம் என்றாகிறது.

“அம்மா சாப்பாடு செய்தனீங்களா?”

“தேத்தண்ணி போட்டுத்தாங்கோ”

என்றெல்லாம் வாயால் கேட்டும் சாப்பிடக் கிடைக்காத குழந்தைகளின் நிலை பரிதாபம்

அவர்கள் கேட்கும் கேள்விகளும் அவள் காதில் விழுவதாக இல்லை. நீச்சப் புதனின் ஓசை மட்டும் காது, மூளை எங்கும் நீக்கமறப் பரவி நிற்கின்றன.

எல்லாம் புதன் மயம்தான் அவளுக்கு இப்பொழுது. இனி எப்பொழுதும் அதுவாகத் தொடரவும் போகிறதா?

பரிதாபம்.

வளரும் குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு சமைத்து கொடுக்க வேண்டும் என்ற புத்தி அற்ற ராஜிக்கு குழந்தைகளின் உடல் நீச்சம் பற்றி புரியவில்லையா?

புதன் நீச்ச மாயை உடல் நீச்சம், குடும்ப நீச்சம், வாழ்க்கையே நீச்சம் எனத் தொடர்கதையாய்…

மாதேவி

13 comments:

  1. இந்த புதன் படுத்தும் பாடு இனிமையான குடும்பத்தை இந்த பாடு ப்டுத்துகிறேதே.

    நல்ல பதிவு மாதேவி.

    நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  2. மாதேவி,

    இதெல்லாம் அம்மாக்கள் சிந்திக்க வேண்டிய விடயம்.

    உணர வேண்டிய கதை.

    ReplyDelete
  3. வாருங்கள் கோமதி அரசு.

    "நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு "
    நல்ல அருமையான கருத்தைக் கூறியுள்ளீர்கள்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. இப்படித்தான் சில் தாய்மார் ஜாதகத்தை கொண்டு சீரழிகிறார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று மனதை திடபடுத்தி வாழவேண்டும் பகிர்வுக்கு . நன்றி மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. சத்ரியன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. வாருங்கள் நிலாமதி.

    நீங்கள் கூறியதுபோல வாழ்வுக்கு மனத்திடம் அவசியம். நன்றி.

    ReplyDelete
  7. மிக்க நன்றி sinnathambi raveendran.

    ReplyDelete
  8. உணர வேண்டிய கதை
    பகிர்வுக்கு . நன்றி !

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  10. என்னை அலுவலகத்தில் கேட்பார்கள்.. நாள் பார்த்து சொல்லுங்க.. இன்னிக்கு செய்யலாமா..என்று. நான் சொல்லுவேன்.. கடவுளை நம்பினால் நாள் பார்க்க வேண்டிய அவசியம் எதற்கு என்று.

    ReplyDelete
  11. சிந்திக்க வைத்த அருமையான இடுகை..

    ReplyDelete