அருகே பட்ட மரத்தின் வெட்டப்பட்ட அடிப்பகுதி கைவிடப்பட்ட காவல் அரண்போல நிற்பது பார்க்க ரம்யமாக இருந்தது.
இலங்கையை மாங்காய் வடிவத்திற்கு ஒப்பிடுவர். பசுமையான தரையின் மத்தியில் இலங்கை வடிவில் ஒரு நீர்த் தேக்கம். அதற்குள் தீவு போல ஒரு நிலப்பரப்பு.
தீவுக்குள் மற்றொரு தீவா?
அந்தத் தீவிற்கு போவதற்கு ஒரு பாதை.
அனுமான் போட்ட கற் பாலம்போல என எண்ணத் தோன்றுகிறது.
விக்டோரியா பார்க்கில் பூப்பறிக்க முடியுமா? பறித்தால் தண்டம் போடுவார்களா தெரியாது.
பூ வாங்குவதற்கு என நகரத்தின் மையத்தில் உள்ள பஸ் நிலையத்தின் மத்தியில் உள்ள கட்டிடத்தின் மாடியில் பல கடைகளில் பூப் பூவாக கடை விரித்திருக்கிறார்கள்.
பிளாஸ்டிக் வாளிகளில் நிறம் நிறமாக பல்வேறு பூக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
பிளாஸ்டிக் வாளிகளில் நிறம் நிறமாக பல்வேறு பூக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
கொழும்பு விலையோடு பார்க்கும்போது கொள்ளை மலிவு. ஆயினும் நிறைய வாங்க பர்சில் காசுத்தாள்கள் மலர்ந்து கொட்டுகின்றனவா?
கொழும்பிலிருந்து நுவரெலியா பார்க்கப் போனவர்களுடன் தொற்றிக் கொண்டு சில பூங் கொத்துகள் கொழும்பு பார்க்க வந்தன.
கொழும்பு பார்க்க மலர்ச்சியுடன் வந்த அவை சின்னுவின் பூச்சாடிக்குள் ஓரிரு நாள் சிலிர்த்திருந்து மறுநாள் முதல் அழுது வடியத் தொடங்கின.
ஆனாலும் எங்களுக்கு இன்னும் நாலு நாளாவது பார்திருந்தால்தான் ஆசை தீரும் போலிருந்தது.
அடுத்த விடுமுறைக்கு சின்னு விடுமுறையில் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு என்பது போல தலை விரித்து வாடி வதங்கிக் காத்திருக்கிறது.
மாதேவி
மாதேவி = அழகு.
ReplyDeleteபூக்கள் அவ்வ்வளவு அழகு.
நானும் போயிருக்கேன்.
பூக்கள் எல்லாம் கொள்ளை அழகு
ReplyDeleteபூக்கள் எல்லாம் அழகோ அழகு..
ReplyDeleteBlogger ஹேமா said...
ReplyDeleteமாதேவி = அழகு. ha...ha..ha
பூக்கள்=அழகு.
வருகைக்கு நன்றி ஹேமா.சென்ற ஞாபகங்களை மீட்டியிருப்பீர்களே.
வாருங்கள் சின்ன அம்மிணி.மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க Sangkavi.
ReplyDelete"பூக்கள் எல்லாம்அழகோ அழகு" ரசனைக்கு நன்றி.
cool place cool pics..
ReplyDeletetks 4 ur cooling comment அண்ணாமலையான்.
ReplyDeleteஅழகு பூக்கள்
ReplyDeleteபடங்களும், பதிவும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் நேசமித்திரன் "அழகு பூக்கள்" க்கு நன்றி.
ReplyDeleteவாங்க துபாய் ராஜா.
ReplyDeleteஉங்கள் கருத்திற்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
இன்னைக்குதாங்க உங்க பக்கத்துக்கு வர்றேன்.... எழில்மயமா இருக்கு... இரம்யமாவே வெச்சு இருக்கீங்க... வாழ்த்துகள்!
ReplyDeleteவருகைக்கு நன்றி பழமைபேசி.
ReplyDeleteவீட்டிலேயே எழிலும் ரம்யமும் இருப்பதால் அப்படி அமைந்திருக்கலாம்.
கண்டில ஒரு பூங்கா இருக்கே. மெகா சைஸ்ல... அங்க வந்திருக்கேனாக்கும்!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஆடுமாடு.
ReplyDeleteகண்டிக்கு வந்தீர்களா மகிழ்ச்சி.அது பேராதனைப் பூங்கா.
பூத்துச் சிரிக்கும் உங்கள் பதிவுகளுக்குப் பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்.
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி.
ReplyDeleteஉங்கள் செந்தாமரை மலரும் சிரித்து மகிழ்ந்து புத்துணர்ச்சி தருகிறது.
அற்புதமான வலைத்தளம்....உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் ,இவற்றை எல்லாம் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்படுகின்றது.
ReplyDelete