Thursday, December 17, 2009
நுவரெலியா விக்டோரியா பார்க்
நுவரெலியா Nuwara eliya நகரின் நடுமையமாக இருக்கும் விக்டோரியா பார்க் சென்றோம்.
சிறிய கார்டின் ஆக இருந்தாலும் அமைப்பில் அனைவரையும் ஈர்த்துக் கொள்ளும். வாசலில் ரிக்கற் பெற்று உள்ளே சென்றோம்.
வாசலிலேயே மிகப் பெரிய டெயிலியாஸ் பூக்கள் வெள்ளை,
ரோஸ், கத்தரிப்பூ,
ஓரெஞ் வர்ணங்களில்
இருபுறமும் வரிசையாக நாட்டப்பட்டு நின்று வரவேற்புக் கூறின.
வெள்ளை, கத்தரிப்பூ என இரு வர்ணம் கலந்த டெயிலியாஸ் புதிய இனமாகத் தோன்றியது. அதன் கலரில் சற்று நேரம் மனங்கிறங்கி மகிழ்ந்தோம்.
அழகில் மனமும் மகிழ்ந்து போயிற்று. லயித்து மாறிமாறிஅனைவரும் நின்று படம் எடுத்துக் கொண்டு தொடர்ந்தோம்.
அடுத்து கோலியாஸ் இன வர்ண இலைச் செடிகள் அழகூட்டி நின்றன.இத்துடன் செவ்வந்திப் பூக்கள் பாத்திகளில் அடுக்காய் மலர்ந்திருந்தது.
மணி வாழை கொத்தாய் பூக்களைத் தள்ளி நின்றது.
மணிவாழை போலவே பூக்களைக் கொண்ட மற்றொரு செடியில் மஞ்சள், ஓரேஞ் கலர்களில் அழகு விரித்திருந்தது.
அவற்றைத் தாண்டிச் சென்ற போது பெரிய அகண்ட சைப்பிரஸ் மரங்கள், அதனூடே பாலம். பாலத்தின் கீழ் ஓடும் நீரோடை என குளிர் காற்றும் தழுவ உடல் நடுக்கம் கொண்டது. சிலிர்த்துப் போய் ஜெர்சி அணிந்து கொண்டோம். இதமாக நடையைத் தொடர்ந்தோம்.
ஒரு புறம் பொட்டில் பிரஸ் மரங்களும்,
பெரிய காட்டு ரோஜா மரங்களும் பிங் நிறத்தில் பூவாய் பூத்து சொரிந்திருந்தன. நிலத்திலும் கொட்டிக் கிடந்தன.
அடுத்து அல்லிப் பூக்கள் பூத்துக்குலுங்கும் குளம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது,
அதற்கு எதிரே குமுதமலர்கள் நீரின்மேல்தலைகாட்டிநின்றன.
அதன் நடுவே பூவாய் விரிந்து தெறிக்கும் நீர் நாற்புறமும் தெளித்து சிதறியது. பாதையால் தொடர்ந்தோம் பெயர் தெரியாத மஞ்சள் பூக்கள்
சிவப்புப் பூக்கள், சிறிய செடிகளில் கூட்டமாய் நின்று கண்ணைப் பறித்தன.
அதையொட்டி பசிய புல்தரை மேலும் அழகைக் கூட்டியது.
பார்த்துக் கொண்டே மறுபுறம் செல்ல வெள்ளை நிற லில்லீஸ் பூக்கள் தலை உயர்ந்து நின்று பூத்து அழகு ஊட்டின. ஜப்பான் ரோஸ் என அழைக்கப்படும் பூக்களின் புதிய இனங்கள் தரையுடன் ஒட்டி முளைத்திருந்து ரோஸ், கத்தரிப்பூ வர்ணத்தில் பூக்களை குவித்திருந்தன.
பச்சைப் பசிய மரத்தை வளர்த்து வளைத்து வெட்டி உள்ளே வீடு போன்று அமைத்திருக்கிறார்கள் இதிலே பெஞ்சும் உள்ளது. இது சுற்றுலாப்பயணிகள் எல்லோரையுமே கவர்வதால் அனைவரும் புகைப்படம் எடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
நடுவே பூட் ஸ்டால் ஒன்று சிற்றுண்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. வர்ணப் பைக்கற் உணவுகள் தொங்கி நின்று சாப்பிட அழைத்தன.
அதைத் தொடர்ந்து புல்தரை பாரிய மரங்கள்.
இவற்றுடன் கூடிக் கிளைவிட்டு பரந்து நின்ற மரங்கள் நடந்த களைக்கு உட்கார்ந்து கால்களைத் தொங்கப் போட்டு இளைப்பாற இடம் கொடுத்தன.
அங்கே ஒரு குட்டிக் குருவி முறிந்த மரத்தின் கொப்பின் நுனியில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.
சூழலுடன் இசைந்த அதன் கலர் கண்ணாம் மூஞ்சி காட்டியது. கண்டு பிடித்து ரசித்துக் கொள்ளுங்கள்
அவரைப் பார்த்ததும் எமக்கும் ஆசை பிறந்தது. சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு நடந்தோம். படமும் எடுத்துக்கொண்டோம்.
நீண்டகுளம் அதன் மேல்அழகிய உயர்ந்து வளைந்த பாலம் தென்பட கால்கள் அங்கே விரைந்து சென்றன.
பாலத்தில் ஏறிச் சுற்றுச் சூழலை ரசித்தோம்.
சடைத்த இளம் மூங்கில் மரங்கள் மஞ்சள் பச்சை நிறமாய் விரிந்து நின்று பசும் காட்டை நினைவூட்டியது.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான படங்கள். அழகான இலங்கை.நன்றி.
ReplyDeleteகண்ணுக்கு மிக அருமையான விருந்தாக இருக்கிறது.. காட்சிப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்.. நம்ம ப்ளாக் பக்கம் வாங்களேன்.. நன்றி
ReplyDeleteமிக ரம்மியமாக இருக்கிறது. ஆமா வந்தா உயிரோட திரும்ப வரலாம்ல?
ReplyDeleteநன்றி Anonymous.
ReplyDeleteவாங்க அண்ணாமலையான் உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteஇப்பொழுது பிரச்சனை இல்லையே.
ஹும்ம் அல்லி குமுதம் எல்லாம் இனி உங்க போட்டோ ல தான் பாக்க முடியும்போல... கலக்கல் கிளிக்ஸ்...
ReplyDelete2010ல் முயற்சிக்கறேன்.
ReplyDeleteஅழகான புகைப்படங்களுடன் அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி மாதேவி.
ReplyDeleteவாவ் அருமை நானும் பல தடைவை போயிருக்கிறேன் ஆனால் உங்கள் கமரா காட்சிகள் மட்டும் ஏன் இத்தனை அழகாக
ReplyDeleteவாழ்த்துக்கள்
படங்களை என் கம்ப்யூட்டரில் சேவ் செய்தேன். எங்கேனும் பயன்படுத்த தடையில்லையே
ReplyDeleteவாருங்கள் சரவணக்குமார் கருத்திற்கு நன்றி.
ReplyDeleteநன்றி பலாபட்டறை.
ReplyDeleteஉங்கள் கருத்திற்கு நன்றி தர்ஷன்.
ReplyDeleteபெயர் தெரியாத மஞ்சள் பூ, California Poppy பூக்கள்!
ReplyDeletehttp://www.statesymbolsusa.org/California/CAstateflower.html
அழகாக அமைந்த பயணம்.
ReplyDeleteஅழகான படங்களுடன் நல்ல தகவல்கள். சூப்பர்.
ReplyDeleteஅருமையாய் மலர்ந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDelete