கோகிலத்தின் குடிலெங்கும்
கடைந்தெழும்
மத்தொலியும்
மீட்டியதும் நரம்பதனில்
கிளர்தெழும்
வீணையின் கானமும்
ஒழுங்கை தாண்டி
ஊரெங்கும் அதிர்ந்து
எதிரொலிக்கும்
சேமக்கல ஓசையும்
குருத்தெலும்பு
உடைத்தெறிந்து
செவிப்பறை கிழித்தழிக்கும்
சில்வண்டின்
கீச்சிடும் ஓசையும்
வேட்டைத் திருவிழாவில்
விலங்காடும் விடலைகளின்
வீறோசை மறைந்தொழிக்கும்
லைட்மெசினின்
உதறல் ஒலியும்
கொட்டமடித்து குளநீர்
கலந்துளையும்
மாரித்தவளைக் கூப்பாடும்
நெஞ்சதிர வானடங்கி
பிளந்தொலிக்கும்
கருங்கல் மலையுடைப்பும் ....
எத்தனை எத்தனை ஓசைகள்!
இங்கு படைத்தாய் மனிதா!
இத்தனையும் பிரசவித்து
முளைத்தெழும்
தொடர் மாடிப் புதுமனையில்
பேச்சுக்கும் துணையின்றித்
பேரோசைகளின் மௌனத்துள்
தனிமையில் உறையும்
நான்.
மாதேவி
குருத்தெலும்பு
ReplyDeleteஉடைத்தெறிந்து
செவிப்பறை கிழித்தழிக்கும்
சில்வண்டின்
கீச்சிடும் ஓசையும்
வித்தியாசமான வரிகள்
வேட்டைத் திருவிழாவில்
ReplyDeleteவிலங்காடும் விடலைகளின்
வீறோசை மறைந்தொழிக்கும்
லைட்மெசினின்
உதறல் ஒலியும்
அருமை
\\பேச்சுக்கும் துணையின்றித்
ReplyDeleteபேரோசைகளின் மௌனத்துள்
தனிமையில் உறையும்
நான்.\\
அருமை வரிகள்.
இத்தனையும் பிரசவித்து
ReplyDeleteமுளைத்தெழும்
தொடர் மாடிப் புதுமனையில்
பேச்சுக்கும் துணையின்றித்
பேரோசைகளின் மௌனத்துள்
தனிமையில் உறையும்
நான்.
superb
word verification eduthidunga pa
நல்லாருக்கு, கருத்தும் வரிகளும்
ReplyDeleteஅன்புடன், வயிரவன்
நல்லாருக்கு வரிகளும் கருத்தும்
ReplyDeleteநன்றி sakthi. வருகைக்கும் கருத்துக்களுக்கும்.
ReplyDeleteகருத்திற்கு நன்றி ஜமால்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராம. வயிரவன்.
ReplyDeleteபூச்சரத்துடன் இணையுங்கள் http://poosaram.blogspot.com/
ReplyDeleteசில வார்த்தைகள் வழக்கத்தில் இல்லாதவைகளாக இருக்கே!
ReplyDeleteநீங்க எந்த ஊரு?
நன்றி வால்பையன்.
ReplyDeleteநான் இலங்கையைச் சேர்ந்தவர்.
பேசுவது எழுதுவது எல்லாம் யாழ்ப்பாணத்து தமிழ்.
//ஒழுங்கை தாண்டி
ReplyDeleteஊரெங்கும் அதிர்ந்து
எதிரொலிக்கும்
சேமக்கல ஓசையும்//
அனைத்து ஓசைகளுமே ஏதொவொரு ஒழுங்குக் கொண்டவையாகவே இருக்கும்.சற்று உற்று கவனிக்க வேண்டும்.
"சேமகலம்" தற்போது புழக்கத்திலிருந்து விடுபட்டு வருகிறது.
//கொட்டமடித்து குளநீர்
கலந்துளையும்
மாரித்தவளைக் கூப்பாடும்//
நீர் நிலைகளெல்லாம் வீட்டுமனைகளாக உருமாற்றம் கண்டுவிட்டது தோழி.
தவளைக் கூப்பாடுகளும் குறைந்துப்போய் விட்டது.
ம்ம்ம்....ம்ம்ம்ம்!
பேச்சு வழக்குச் சொற்களைக் கையாள்வதில் கை தேர்ந்தக் கவிதை உங்களுடையது.
மாதேவி,வணக்கம்.உங்களை இத்தனை நாளும் சந்திகவில்லையே!இப்போ சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.அழகான கவிதைகள் கட்டுரைகள் காண்கின்றேன்.
ReplyDeleteதிரும்பவும் வருவேன்.
குழந்தைநிலாவின் பக்கமும் வாங்களேன்.
நன்றி சத்ரியன். எமது ஊர் வழக்கில் 'ஒழுங்கை' என்பது சிறிய தெரு. அதன் எல்லையும் தாண்டி ஒலிக்கும் ஊரெல்லாம் கேட்கும் என்பதையே எழுதியிருந்தேன்.
ReplyDeleteநன்றி ஹேமா. நானும் வருகிறேன்.
ReplyDelete