Tuesday, March 3, 2009

உலக தண்ணீர் தினம் யாழ் மண்ணில் ஒரு நாள்

இது ஒரு சிற்றாறு என எண்ணாதீர்கள். வரண்ட யாழ் மண்ணின் ஒரு வீதி இது. மழை வெள்ளத்தால் ஆறுபோல காட்சியளிக்கிறது. கோண்டாவிலில் உள்ள ஒரு வீதிதான் இது. 2008 நவம்பர் மாதத்தில் ஒரு நாள் அவ்வாறு காட்சியளித்தது.


உலக தண்ணீர் தினம் எதிர்வரும் மார்ச் 22ல் வருகிறதாம். அதனை நினைவூட்டுமுகமாக பதிவுகள் இடுமாறு வின்செனட் கேட்டிருந்தார்.

உலக தண்ணீர் தினத்தின் 2009 அதிகாரபூர்வமான வலைதளத்தின் இணைப்பு:- http://www.unwater.org/worldwaterday/flashindex.html

யாழ்மண் வரட்சிக்குப் பேர்போனது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மட்டும் மழை கிடைக்கும். ஆயினும் ஏனைய நாட்களிலும் கிணற்றின் மூலம் நீர் கிடைக்கும்.

இப்பொழுது தண்ணீர் பம்புகள் மூலம் அதிகளவு நீர் இறைக்கப்படுவதால் நிலக்கீழ் நீர் உவராக மாறிவருகிறது. இதனைத் தடுப்பதற்கு பாரிய முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. போர்ச் சூழலால் எந்தவித அபிவிருத்திகளும் கிடையாது.

இந்தநிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் பெய்த கடும் மழையால் யாழ் குடாநாடே தவித்தது. வயல்வெளிகளில் வெள்ளநீர் நிரம்பிக் கிடக்கும் படம் மேலே உள்ளது. மேலே உள்ள இரண்டு படங்களும் துவாரகனது.

இந்த மழையின் தாக்கம் பற்றி மேலும் படிக்க கீழே சொடுக்குங்கள்.
http://www.inllanka.com/infonation/news/more_news.asp?ty=lo&id=5608

5 comments:

  1. யாழ் மண்ணில் மட்டுமல்ல, தமிழகமும் அவ்வாறாகத்தான் மாறி வருகின்றது.

    அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுக்கின்றன, இருக்கின்ற ஏரி குளங்களையும் தூர்த்து, வீடுகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளுமாக மாற்றி விட்டனர். தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஆழ்துளை கிணறுகள் வேறு.

    // இப்பொழுது தண்ணீர் பம்புகள் மூலம் அதிகளவு நீர் இறைக்கப்படுவதால் நிலக்கீழ் நீர் உவராக மாறிவருகிறது. //

    உங்களது தமிழை மிகவும் ரசித்தேன். நிலத்தடி நீர் என்பதைவிட, நிலக்கீழ் நீர் எனபது இன்னும் அழகாக இருக்கின்றது.

    உங்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  2. தண்ணீர் அதிகம் வந்தாலும் கஷ்டம், இல்லேனாலும் கஷ்டம் இல்லியா

    ஒரு புறம் தண்ணீர் கஷ்டம், ஒரு புறம் அளவிற்கதிகமாக தண்ணீர்

    ReplyDelete
  3. அண்ணன் சொன்னது போல ...

    அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுக்கின்றன.

    எல்லை என்பது பிரித்தாள்வதற்கு ஏதுவாய் இருக்க செய்யப்பட்டது, ஆனால் மக்கள் அரசியல் செய்வதற்கு இன்னும் என்ன என்ன செய்ய போகிறார்களோ ...

    ReplyDelete
  4. யாழ் மண்ணில் மட்டுமல்ல, தமிழகமும் அவ்வாறாகத்தான் மாறி வருகின்றது.

    ReplyDelete