Tuesday, March 22, 2011

உலக தண்ணீர் தினம் 2011. சோகமான புன்னகை

இன்று உலக தண்ணீர் தினம்.  ஐ.நா ‘நோயுள்ள நீர்’ என சென்ற ஆண்டு விடுத்திருந்த அறிக்கையை மீண்டும் நினைவு கொள்வோம்.

இந்த ஆண்டுக்கானது  Water for Cities: Responding to the Urban Challenge.

கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான நீருக்கு அவதிப்படுகிறார்கள்.

சுத்தமான நீரைப் பெறமுடியாமல் வருடாந்தம் 5 வயதிற்கு உட்பட்ட 18 இலட்சம் சிறுவர்கள் பலியாகுகிறார்கள்.


அசுத்தமான நீரால் ஏற்படும் நோய்களான வயிற்றுப்போக்கு,வாந்திபேதியால் வருடத்துக்கு 22 இலட்சம்பேர்வரை இறப்பதாகக் கூறியுள்ளார்கள். அசுத்தமான நீர் இவ்வாறு மக்களைப் பலியாக்குகிறது.


நீருக்கான நெருக்கடியில் மனித நடவடிக்கைகளும் அடங்கியுள்ளன இவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் கைக்கொண்டு வந்தால் உலகமும் உயிர்களும் வாழும்.



சிரிக்க சிந்திக்க –


ஒருவர் - இன்றைய செய்தி கேட்டீர்களா ?
மற்றவர் - என்ன…. என்ன ?
ஒருவர் - தண்ணிக் கப்பலை பக்கத்து நாட்டுக்காரன் கடத்திக்கொண்டு போட்டான்.
மற்றவர் - இதென்னடா கொடுமை அவன் தண்ணி விற்ற காசில் வல்லரசாகி விடுவானே!!

0.0.0.0.0.

அம்மா – நீண்ட நேரமாய் பாத்ரூமில் நின்று விசில் அடித்துக் குளித்தது போதும் வா வெளியே.
மகன் - நான்  அடிக்கேலை பைப்தான் விசில் அடிக்குது.


அம்மா - !!!

0.0.0.0.0.

நிரூபர் - இந்தத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன?
அரசியல்வாதி – நாளொன்றுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்துகுடம் தண்ணி  தருவேன் எனக் கூறியிருந்தேன்.
நிருபர் - !!!


0.0.0.0.0.

பாத்ரூமில்  கணவனின் அலறல் - இன்று காலை ஆருடைய முகத்தில் விளித்தேனோ!
மனைவி – ஏனப்பா
கணவன் - முகம் கழுவ வை…த்…..த..த… ஒருகிளாஸ் தண்ணியை உடை….ச்…சு..ப.;…போட்…டன்.
மனைவி கோபாவேசத்துடன் -  அய்யோ…அய்யோ… இந்த மனுசன் நாசமாகப் போக…..   படித்துப் படித்துச் சொன்னேன்தானே  கவனம் என்று….. துவாயிலை சும்மா முகத்தைத் துடைத்துக்கொண்டு ஆபீசுக்குப் போங்கோ.
கணவன்- !!!

0.0.0.0.0.

11 comments:

  1. நகைச்சுவையாக தண்ணீா் சேமிப்பின் அவசியத்தை அருமையாக பதிவிட்டுள்ளீர்... நன்றி..

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html

    ReplyDelete
  2. தேவையான பதிவு..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. சோகமான புன்னைகை எதிர்காலத்தைப் படம் பிடித்துக் காட்டியது.உணர்த்தும் செய்தியை உணரவேண்டியது காலத்தின் கட்டாயம்.பகிர்விற்குப் பாராட்டுக்கள்.
    http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_18.html//
    தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசம்
    என்கிற தலைப்பில் என் பதிவைப் படித்து கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழி.

    ReplyDelete
  4. Must take awareness.

    Please visit our blog
    http://jaghamani.blogspot.com/2011_03_18_archive.html
    தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசம்
    Thank you.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேடந்தாங்கல் கருன்.

    ReplyDelete
  6. மிக்க நன்றி பாட்டுரசிகன்.

    ReplyDelete
  7. வாருங்கள் இராஜராஜேஸ்வரி .

    கருத்துக்கு நன்றி.

    படிக்கிறேன்.

    ReplyDelete
  8. மிகவும் தேவையான பதிவு.

    ReplyDelete
  9. வாருங்கள் லஷ்மி.

    கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. நல்ல உருப்படியான பதிவு மேடம்

    ReplyDelete
  11. வாருங்கள் சி.பி.செந்தில்குமார்.
    உங்கள் கருத்து மகிழ்ச்சியைத் தருகிறது.
    மிக்க நன்றி.

    ReplyDelete