Sunday, November 21, 2010

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ... மின்னேரியா சரணாலயத்தில்.....

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பறவைகள் தமது வாழ்விடங்களை மாற்றிக் கொள்ளும். அதி குளிர் காலங்களில் பனிப் பிரதேசங்களில் வாழும் பறவைகள் வெப்பவலயப் பிரதேசங்களுக்கு பல மைல்கள் கடந்து செல்லும்.

இயற்கையின் வனப்பான ஓவியமாக..

ஆயிரக் கணக்கில் கூட்டாக இடம் பெயரும். அப்பொழுது பல சிரமங்களையும் அவை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களுக்கு உணவு அருந்தாமல், தொடர்ந்து பறந்து செல்ல வேண்டியும் நேரிடும்.

பெரும் கடல்கனைத் தாண்டும்போது தரிக்காது தொடர்ந்து செல்லும். பறக்கும் காலத்திற்கு முன்பே நிறைய உணவுகளைச் சாப்பிட்டு கொழுப்பைச் சேமித்து வைத்திருக்கும். அதிலிருந்து பறப்பதற்கான சக்தியைப் பெற்றுக்கொள்ளும்.

சிந்து பாடும் பறவைகள் நாம் திருடித் தின்ன வருகிறோம்.
 சேறு நிறைந்த களிமுகப் பகுதிகள், நீர்த் தேக்கங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பாறைகள் நிறைந்த கரையோரங்கள், நீர் நிலைகளை அண்டிய மரக் கூடல்கள், என இரைகள் ஏராளமாகக் கிடைக்கும் இடங்களில் குடிபுகும்.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தங் கொண்டாடுதே...
இக்காலத்தில் இணையத் தேடி, முட்டையிட்டு, அடை காத்து, குஞ்சுகளை வளர்த்து அவை பறக்கும் வயது வர காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மீண்டும் தமது பழைய இடம் நோக்கிப் பயணிக்கும்.

தங்கமீனே தங்கமீனே மொறுமொறு சோளப் பொரி நான் தருவேனே
சில பறவைகள் பறக்கும்போது எங்கும் தரிக்காமல் தொடர்ந்து 4500 கிலோ மீற்றர் வரை பறக்கக் கூடியவை.பசிபிக்கில் உள்ள பொன்நிற உப்புக் கொத்தி இவ்வகையானது.

காத்திருந்து நொந்தேனே, வயிறு வற்றிப் போனதிங்கே
பெரும்பாலும் தொடர்ந்து காலம் காலமாக ஒரே இடத்தில் வந்து தங்கும். அதனால் இவற்றின் வாழும் இடங்களை சிதைக்காமல் காப்பது எமது கடமையாகும். பறவைகள் தங்கிச் செல்ல சரணாலயங்களை அமைத்து அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும்.

காதலர் இருவர் ஊடலில் முகம் திருப்பினரோ?
இலங்கையில் பறவைகள் சரணாலயம் குமணவில் அமைந்துள்ளது.

மீனைக் குறி வைக்கும் கழுகுக் கண்ணர்
பறவைகள் தூங்கும்போது தமது சிறகுகளை சிலிர்த்துக் கொண்டு உப்பலாக வைத்துக் கொள்ளும். அதனால் இறகுகளுக்குள் காற்றுப் புகுந்து உடல் வெப்பம் வெளியே செல்லாதபடி தடுக்கும். குளிரிலிருந்தும் இவற்றைக் காக்கும்.

பென்குயின் பறவை கடல் நீரையும் பருகும்.  பறவைகள் சில பறக்கும்போதே தூங்கும். ஆல்பர்ட்றாஸ் பற்வைகள் இவ்வகையன. புறா அதிகமாக நீர் அருந்தும். மிகச் சிறிய முட்டையிடும் பறவை தேன்சிட்டு. பென்குயின், கிவி பஸ்டா பறக்க முடியாத பறவைகளுக்குள் அடங்கும்.

நீலவண்ண பறவையார் பட்ட மரத்தில் மீன் கொத்தக் காத்திருக்கிறாரோ?

மின்னேரியாவில் வெளிநாட்டுப் பறவைகள் வெள்ளை நிறத்தை உடையனவாய் சிறகுகளில் கறுப்பு பற்றிக் அடித்ததுபோல இருந்தன. இவற்றின் சொண்டும்,கால்களும் மஞ்சள் நிறத்தனவாய் காணப்பட்டன. அவை செட்டையை விரித்துப் பறக்கும்போது மிகவும் கவர்ச்சி உடையனவாக இருந்தன.

வானம் வசப்படுகிறது இவர்கள் சிறகடிப்பில்
வெள்ளை, மஞ்சள், கறுப்பு, சாம்பல் நிறங்களில் கொக்கு, நாராய்கள் சிலவும் இருந்தன. Open bills, Painted strokes, Ducks, King fisher, owls, falcon, Shore birds இனங்கள் பெரும்பாலும் இங்கு காணப்பட்டன. சுமார் 160 இன வகையான பறவைகள் இங்கிருப்பதாக அறியத் தெரிகிறது.
 

பல பறவைகள் நதியோரம் நதியோரம் எம்மைச்சுற்றிப் பறந்தன.
பறவைகள் என்றதும் பாடல்களும் நினைவில் பறக்கிறதே…

சிறுவர் பாடல் ஓன்று

அந்திசாயும் நேரம் ஆசையாக நண்டு கவ்வுகிறார்
வாய்க்காலிலே வெள்ளம்
வாத்து இரண்டும் குள்ளம்
மூக்கிலே கறுப்பு
முதுகு கொஞ்சம் பழுப்பு
வண்ணத் தேரென நடந்து செல்லும் காட்டுக் கோழியார்

சினிமாப் பாடலில் பிரபல்யமாக இருந்த பாடல்கள் சில
‘கொக்கு பற பற
கோழி பற பற
குயிலே பற பற….”

“சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கு குக்கு கூ... கூ...”

பழைய பாடல் ஒன்று
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…”

தனிமையிலே இனிமை காணும் கறுத்தச் செட்டையார்

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்…… 


இது எங்க வீட்டுச் சின்னு மயில்....

விழாவில் மயிலாட்டம் போடுகிறாள்.

மின்னேரியா வனவிலங்கு சரணாலய காட்சிகள் கொண்ட எனது ஏனைய பதிவுகள்.



மின்னேரியா தேசிய வனத்தில் நாம்.

யானைகள் மத்தியில் நாம் ...

யானைச் சவாரியும் 'அலியாக் கடே யானை' யும்

மாதேவி

12 comments:

  1. அருமையான புகைப்படங்கள். சுற்றுலா போனது போலிருக்கிறது.

    ReplyDelete
  2. இலங்கையனாக இருந்தும் மின்னேரியாவைக் காணக்கிடைக்கவில்லை. அழகாக தகவல்களுடன் தொகுத்துள்ளீர்கள். விபரணச் சித்திரங்கள் விரும்பிப் பார்ப்பவன் எனும் வகையில் தங்கள் தகவல்கள்
    சிறப்பு.
    நிறைகூடிய, வேகமாக ஓடக்கூடிய,பெரிய முட்டையிடும் , பறக்கமுடியாத பறவை-தீக்கோழி
    குறுகிய நேரத்தில் அதிகமுறை சிறகடிக்கும்; மிக எடை குறைந்த பறவை - தேன் சிட்டு -பிறேசிலில் உள்ளது.

    ReplyDelete
  3. நல்ல புகைப்படங்கள்..

    ReplyDelete
  4. மிக்க நன்றி டொக்டர்.

    ReplyDelete
  5. யோகன் பாரிஸ் உங்கள்வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. சாமக்கோடங்கி said...

    நல்ல புகைப்படங்கள்.. said...


    மிக்க மகிழ்ச்சி சாமக்கோடங்கி.

    ReplyDelete
  7. “சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கு குக்கு கூ... கூ...”//
    Arumai! arumai!!

    ReplyDelete
  8. உங்கள் பாட்டு மிகவும் அருமை. ரசித்தேன்.

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete