எழிலாய் உடுத்திய ராஜா |
அவர் மேலே ஏறுவதற்கு ஓர் இடத்தில் மரத்தாலான ஏணிப்படிகள் கட்டி வைத்திருந்தார்கள். படிகளின் மேல் ஏறிச்சென்று இவர் மேலிருக்கும் கூட்டில் அமர்ந்து சுற்றுலா வரலாம்.
இருபுறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிழல் தரும் பாதையால் இனிய பயணம் செல்லலாம். சலசலத்து ஓடும் ஆற்றையும். தண்ணீர் தெறிக்கக் கடந்து சென்று சுற்றிலாகவமாகக் காட்டி வருவார்.
தோப்புகளுடான குறும் பாதையில் |
வழியே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளும் விரிந்த தோப்புகளும் இருந்தன. தோப்புகளில் தென்னை பலா இலைகளை வெட்டிக் குவித்து இவருக்கு உணவாக வைத்திருப்பதைக் கண்டோம்.
வழியில் முயல், கிளி, குருவிகள், கோழி வளர்ப்பு பாம் ஒன்றும் இருந்தது. பாம் வேலியில் உள்ள கொடியின் கொத்துப்பூவில் தேனருந்தும் வண்ணத்துப் பூச்சியார்கள், அழகான செட்டை அடித்துத் திரிந்தனர். ஒருவர் அகப்பட்டார்.
தேனருந்தும் வண்ணத்துப் பூச்சியார் |
சவாரிக்கு ஏறும் ஏணிப்படிகளுக்கு அருகே |
ராஜாவைக் கெடுக்க வேண்டாம் என்று எங்களை ஹா… ஹா வெட்டிவிட்டேன்.
ராஜாவுக்குக் கொடுத்த வரவேற்பு தனக்கு இல்லையா என ஜீனியர் ஹோர்லிக்ஸ் குடித்து வளரும் எங்கள் வீட்டுப் பஞ்சுக் குட்டியார் நானே பெரியவன் என சேர்க்கஸ் போட்டுக் காட்டுகிறார்.
பஞ்சுக் குட்டி யானையார் |
உண்மையில் பெரியவர் அமைதியாகச் சிரித்துக் கொண்டு இருக்கிறார்.
பெரியவர் மிகவும் பிரபல்யமானவர். நீண்ட காலமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். எல்லோர் வாயிலும் புகழ்ந்து அழைக்கப்பட்டு வந்தவர். தன்னடக்கமாக நிற்கிறார்.
அவரின் பரம்பரை வரலாறு மிகவும் பிரபலமான ஒரு அழகிய நகரத்தில் நடுநாயமாக இருந்த மார்க்கற் கடையில் ஒய்யாரமாக முன்னே இருந்து வருபவர்கள் அனைவரையும் Welcome கூறி வரவேற்றவர்.
அவரின் பெயராலேயே கடைப் பெயரும் அழைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அவரின் புகழை. “அலியாக் கடே” என அழைக்கப்பட்டது. அலியா என்றால் யானை. கடே என்றால் கடை. “யானைக் கடை” என்றே அழைத்தனர் மக்கள். வயது 90 + வருடங்கள்.
“அலியாக் கடே” யானை |
கடையில் வீற்றிருந்தவர் 70-75 வயதில் ஓய்வு பெற்று எங்கள் வீட்டில் குடி புகுந்தார். முன்பு மாதந்தோறும் மாதேவி கையால் முழுகாட்டப்பட்டு ஒளி வீசியவர் பிரிந்த சோகத்தில் இப்படி ஆகிவிட்டார்.
தற்போது அண்ணா வீட்டுப் பறனில் வாழ்க்கை.
ஊர் சென்ற போது வெளியே அழைத்து கொட்டகையில் கட்டிவிட்டேன்.
மாதேவி
அருமையான படங்கள். யானையை பற்றி நாள் முலூவதும் பேசலாம்
ReplyDeleteNice! :) Wishes!!
ReplyDeleteஉங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆம் :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி LK.
மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி ஜீ .
வாழ்த்துக்கு நன்றி அண்ணாமலையான்.
ReplyDeleteஆஹா! ரம்யத்தை மறந்தே விட்டேன் பார்த்தால் என்ன அழகு !காட்டு படங்கள்.
ReplyDeleteஅருமையான படங்கள்.
வாருங்கள் கோமதி அரசு உங்கள் வருகைக்கும்,ரசனைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅழகான படங்கள்..புதுப் புது தகவல்கள்..
ReplyDeleteஊர் சென்ற போது வெளியே அழைத்து கொட்டகையில் கட்டிவிட்டேன்.//
ReplyDeletevery nice!
பழையபொருட்களை பேணிக்காக்கத் தெரியாமல் பலவற்றை இழந்து விட்டோம் என்ற கவலைதான்...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.