Saturday, September 25, 2010

மின்னேரியா தேசிய வனத்தில் நாம்.

இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் மலைகள், நீர்வீழ்ச்சிகள், நதிகள், காடுகள், சரணாலயங்கள், அழகான கடற்கரைகள் என இயற்கை வளங்கள் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

நீரும் வனமும்

மகாசேனனால் கட்டப்பட்ட மின்னேரியா குளம் 4670 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கடல் போன்ற பெரும் குளம் இது.

மகாசேன மன்னன்

 மிகவும் கடின உழைப்பின் மூலமே இது கட்டப்பட்டிருக்கும் எனப் பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது.


இதனைக் கட்டி முடித்தபடியால் இவனுக்கு மின்னேரியாக் கடவுள் என்ற பெயரும் கிடைத்தது.

தூரத்தில் வெண் புள்ளிகளாக பறவைகள்

இதைத் தவிர மகாசேனன் ஏறத்தாள 16 குளங்களைக் கட்டுவித்து நீர்ப்பாசனத் துறைக்கு வித்திட்டுள்ளான்.


மின்னேரியாக் காடு, நீர் எனச் சூழல் இனிதாக அமைந்ததால் இயற்கையுடன் மிருகங்கள் வாழ ஏற்ற இடமாக அமைந்துவிட்டது. காடும் பசுமையாக இருக்கிறது.


காட்டுடனான எமது நான்கு ஐந்து மணி நேர வாழ்க்கைக்காக இரவுத் தூக்கத்தைக் கலைத்து எமது பிரயாணத்தை ஆரம்பித்தோம். கொழும்பிலிருந்து 4 மணிநேரப் பணயத்தில் ஹபரணையை அடைந்தோம். அதிகாலை 5 மணி அளவில்.



காட்டிற்குள் செல்வதற்கு திறந்த ஜீப்பொன்றை அமர்த்திக் கொண்டோம். உயர்ந்த ஜீப்பில் நாலுகால் மனிதர்களாகப் பாய்ந்து ஏறப் பழகிக் கொண்டோம்.

காட்டில் யானை ஜீப்பில் மனிதர்கள்

இனிய அதிகாலைப் பொழுதில் இதமாக குளிர் காற்று எம்மைத் தழுவிச் செல்ல ஜீப்பும் வேகத்துடன் பயணித்தது.


மேலே உள்ள இரும்பு பாறில் (bar) கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டோம்.



வாசலில் மின்னேரிய வனம் என்ற போர்ட்டுடன் அழகிய காட்டின் ஆரம்பமாக உயர்ந்த நெருங்கிய சோலைகள் தென்பட்டது.



உள்ளே சென்று பதிந்து ரிக்கெற் பெற்றுக் கொண்டோம்.ஒருவருக்கு எண்பது ரூபாவும் ஜீப்புக்கும் கமராவுக்கும் தனித்தனியாகப் கட்டிக் கொண்டோம்.


காட்டின் ஊடான பயணம் ஆரம்பமானது.

காட்டின் ஆரம்பம்

இருபுறமும் மரங்கள் நெருங்கி அமைந்திருக்க நடுவே குறுகிய மண்பாதை தொடர்ந்து செல்கிறது. ஓரிரு மைல்கள் சென்றதும் நெருங்கிய அடர்ந்த காடு தொடங்கியது. ஜீப் விரைந்து கொண்டிருந்தது.


நீலவானில் பறவைகள் சுதந்திரமாக கீக் கீக் கீதமிசைத்துச் சிறகடித்தன.

அதோ அந்தப் பறவை போல...


சடுதியில் ஒரு பக்கமாக அழகிய இந்திய தேசியப் பறவைகள் "Wait Wait" எனக் கத்தி வாகனத்தை நிறுத்திக் கொண்டோம்.


கிளிக்கியவர் கீழே. 'கொற கொற' எனக் கேவிக் கொண்டே விரைந்து ஒளிந்தன.



மறு பக்கம் திரும்பினால் தூரத்தில் யானை.



உள்ளே நிறையப் பார்க்கலாம் எனச் சொல்லி வழிகாட்டி அழைத்துச் சென்றார். விரைந்த வாகனத்தை திடீர் பிறேக் போட்டு காட்டினூடே காட்டினார்.

இலைகளை வளைத்து உண்டு கொண்டிருந்த அழகிய புள்ளி மான் கூட்டங்கள்.

பார்க்காத மான்

ஆ! என நாம் ரசிக்கவும் ஒரு நொடியில் விரைந்து காட்டினுள்ளே மறைந்தன. கிளிக்க முடியவில்லை.


இடையே நமது தோழர்கள் தாவி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

காட்டுப் பயணம் தொடரும்.

மாதேவி

9 comments:

  1. பயணக்கட்டுரையும், படங்களும் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. இலங்கையின் இனிய பக்கங்கள்!!

    ReplyDelete
  3. மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    ReplyDelete
  5. உங்கள் பயணக் கட்டுரைகள் அருமை. குறிப்பாக புகைப்படங்கள்..சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன... தொடரட்டும் உங்கள் பதிவுகள்!!

    ReplyDelete
  6. நன்றிக்கு பதில் நன்றி கூறிக்கொள்கிறேன்.ஜோதிஜி.

    ReplyDelete