Wednesday, March 17, 2010

நீரின்றி அமையாது வாழ்க்கை


மனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான நீர் மிகவும் அவசியம் என சிறுவயது முதலே படித்து வருகிறோம்.

நாம் பருகுவது சுத்தமான நீராக இருக்க வேண்டும்.
நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து எடுத்த நீர் அல்லது பில்டரில் வடிகட்டிய நீர் குடிப்பதற்கு ஏற்றது.
குழாய் நீரை நேரடியாக எடுத்து அருந்துவதை நிறுத்த வேண்டும்.

நீரில் பக்றீரியாக்கள் இருப்பதால் டயரியா, டைபொயிட், கொலரா, மஞ்சள் காமாலை போலியோ, குடற் புழுக்கள், போன்ற நோய்கள் வரும் என்பதை நாங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறோம். ஆயினும் எத்தனை பேர் இதனை சரியாகக் கடைப்பிடிக்கிறோம்?

ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் மேற் கூறிய நோய்களுக்கு மேலாக நீரினாலும் நீர் மாசடைவதாலும் பரவும் நோய்கள் என நீண்டதொரு பட்டியலையே தந்திருக்கிறது.

• Anaemia
• Arsenicosis
• Ascariasis
• Campylobacteriosis.
• Cholera.
• Cyanobacterial Toxins
• Dengue and Dengue Haemorrhagic Fever.
• Diarrhoea .
• Drowning
• Fluorosis
• Guinea-Worm Disease (Dracunculiasis).
• Hepatitis.
• Japanese Encephalitis.
• Lead Poisoning.
• Leptospirosis
• Malaria .
• Malnutrition .
• Methaemoglobinemia
• Onchocerciasis (River Blindness).
• Ringworm (Tinea)
• Scabies
• Schistosomiasis.
• Spinal Injury
• Trachoma.
• Typhoid and Paratyphoid Enteric Fevers.


ஆபிரிக்க நாடுகளில் நீர் பற்றாக் குறையால் முகத்தை நன்கு சுத்தம் செய்யாததாலும், இலையான்கள் (ஈ) பெருகுவதாலும் ரக்கோமா (tracoma)நோய் ஏற்பட்டு குணப்படுத்த முடியாத பார்வை இழப்புகள் இன்றும் நடப்பது எத்தனை கொடுமை.


6 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிரந்தரப் பார்வை இழப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். மேலும் 146 மில்லியன் மக்கள் பார்வை இழக்கும் ஆபத்தை எதிர் நோக்குகிறார்கள்.

போதியளவு சுத்தமான நீர் கிடைக்காமையால் ஏற்படக் கூடிய ஆபத்திற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.

கிராமங்களில் வீட்டுக் கூரைகளின் பீலிகளை ஒட்டி கீழே பெரிய தொட்டிகள் கட்டி வைத்திருப்பார்கள். மழைக் காலத்தில் பீலிகளிலிருந்து விழும் நீர் தொட்டிகளில் நிரம்பி இருக்கும். பாத்திரங்கள் வீடு கழுவ, உடைகள் அலச, பூமரங்கள் பயிர்கள் நீர்ப் பாய்ச்சுவதற்கும், இந் நீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மழை நீர் மிகவும் சுத்தமானது. அதில் இரசாயனப் பொருட்கள் கலக்க வாய்ப்பில்லை.

எங்கள் முன்னோர் நேரடியாகப் பெறும் மழை நீரை எடுத்து வைத்து தேநீர் தயாரிக்கவும் பருப்பு அவிக்கவும் பயன்படுத்துவார்கள்.
அவற்றின் தரமோ சொல்லி மாளாது.

ஏனெனில் எமது யாழ்ப்பாண நீர் பல பகுதிகளில் சற்று உவர்ப்பாக இருப்பதால் பருப்பு அவிவது குறைவு. தேநீரும் சற்று சுவை குறைவாகவே இருப்பதால் அவ்வாறு மழை நீரை பயன்படுத்தி சமையலை அசத்துவார்கள்.

மழை நீர் சேகரிப்பு என்பது கடலை அண்டியுள்ள உப்பு நீர் உள்ள பிரதேசங்கள், நிலத்தடி நீர் வளம் குறைவாக இருக்கும் பிரதேசங்கள், ஆழக் கிணறு ஊற்றுக்கள், வரண்ட பூமியில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்தர வல்லன.


முன்னைய காலத்தில் குளம், ஏரி, கேணிகள் மழை நீரைத் தேக்கி வைத்து நீர் பாசனத்திற்கும், விலங்குகள் குடிப்பதற்கும் இருந்தன.
சலவைத் தொழிலாளர் தொழில் செய்வதற்கு என்றே தனியான குளங்களும் இருந்தன.

அத்துடன் வெள்ள நீர் கடலுடன் கலக்காது நிலத்தடி நீராகச் சேகரிப்பதற்கும் இவை அவசியமானவையாகும்.

நிலத் தட்டுப்பாடுகள் காரணமாக இருந்த கேணி குளங்கள் பல படிப்படியாக வீட்டு மனைகளாகவும், விளையாட்டுத் திடல்களாகவும் மாறியதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.


கோயில்கள் தோறும் குளம் வைத்திருப்பது எமது மரபு.
இன்றும் பெரும்பாலான குளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இவற்றில் எத்தனை குளங்கள் சுத்தமாக இருக்கின்றன?
புனித நதிகள் யாவும் படும்பாடு சமயச் சடங்குகள் என்ற பெயரால் தொலைக்கின்றோம்.

உயிர் வாழ்வதற்குச் சுத்தம் முதலாம் பட்சம் சமயச் சடங்குகள் இரண்டாம் பட்சம் என்ற நிலையை எப்போ உணரப் போகிறோம்?

அணு மின்நிலையம், நூல் பனியன் தொழிற்சாலை, உலோகக் கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுவதால் மீன்கள் ஆடுமாடுகள் இறப்பதையும் அந்த நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கு வரும் நோய்கள் பற்றியும் அன்றாடம் நிறையச் செய்திகளைத்தான் பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம்.

"வெப்ப மிகுதியால் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் வற்றி விட்டது தண்ணீர் வெட்டு".
"குடி நீர் கிடைக்காமையால் மக்கள் பெரும் கஷ்டம்" என்ற செய்திகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.

குடிநீருக்காக பல மைல் தூரம் குடத்துடன் நடந்து செல்லும் சனங்கள் எத்தனையோ பேர் கிராமங்களில் இருப்பதை இன்றும் காண்கிறோம்.

கழிவு நீரைப் பயன்படுத்தல்

உலகம் முழவதும் எத்தனை நாடுகள் நீர்ப் பற்றாக் குறையினால் துன்பப்படுகிறார்கள் என்பதை இங்குள்ள வரை படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


நீர் கிடைக்காமல் இருப்பது பரிதாபத்திற்குரியது. ஆனால் கிடைக்கும் நீரையும் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாது எத்தனை நாடுகள் துன்பப்படுகின்றன.

கழிவு நீரை மீள் சுழற்சிசெய்வதை இப்பொழுது பல நாடுகள் செய்யத் தொடங்கியுள்ளன. வருடாவரும் 1,500 cubic kilometres கழிவு நீர் உலகளாவிய பெறப்படுகிறது.

கழிவு நீரில் நோயை உண்டாக்கும் கிருமிகள் மட்டுமின்றி பல போசனைப் பொருட்களும் உள்ளன.

கிருமிகளை நீக்கினால் நல்ல பசளையைப் பெற முடியும். நீரை நீர்ப்பாசனத்திற்கும், மிகுதியை சக்தி உற்பத்திக்கும் பயன்படுத்த முடியும்.

வளர்முக நாடுகளில் 80 சதவிகிதமான கழிவு நீர்கள் சுத்தப்படாது வெளியேற விடப்படுகின்றன.

அதனால் பல விதமான நோய்கள் பரவுகின்றன. இவற்றை சரியான முறையில் சுத்திகரித்தால் பயிர்களுக்காவது போதிய நீர் கிடைக்கும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு கிடைக்கும் நீரையும் அளவுடன் பயன் படுத்துவோம். மாசு படுத்தாது பாதுகாப்போம். எதிர் காலத்தில் நீருக்காக ஏற்படப் போகும் பிரச்சனைகளைத் தடுப்போம்.

காடுகள் எரியூட்டலைத் தடுப்போம்.

இயற்கை எமக்கு அளித்துள்ள வளங்களை அழியாது பாதுக்காத்துக் கொண்டோமேயானால் பருவ மழைகள் நீர் வளம் குன்றாது. பூமியில் வெப்பமும் அதிகர்க்காது தடுக்கலாம்.

புவியைக் காத்து நாமும் வளம்பெறுவோம். வருங்கால சந்ததிக்கும் விட்டுச் செல்வோம்.

உலகத் தண்ணீர் தினத்திற்கான தொடர் பதிவுக்கு அழைத்த சந்தனமுல்லை கிளிக் பண்ணுங்கள் அவர்களுக்கு நன்றி.

இத் தொடரைத் தொடர்ந்தும் கொண்டு செல்ல எனது பதிவுலக நண்பர்களில் சிலரான

ஜெஸ்வந்தி கிளிக் பண்ணுங்கள் ,

அமைதிச் சாரல் கிளிக் பண்ணுங்கள்

சின்ன அம்மிணி கிளிக் பண்ணுங்கள் ஆகியோரை அழைக்கிறேன்.

மாதேவி


23 comments:

 1. தண்ணீரை வைத்து ஒரு அறிவு சமையலே பண்ணிட்டீங்க..:))

  அருமை:))

  ReplyDelete
 2. தேவையான இடுகை, நன்றாக வந்திருக்கிறது கட்டுரை.

  ReplyDelete
 3. அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 4. அழகாக எல்லா விடயங்களையும் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். என்னை அழைத்ததற்கு நன்றி. ஆனாலும் இனி எதை நான் புதிதாகச் சொல்லப் போகிறேன் என்ற மலைப்பாக இருக்கிறதுதோழி.

  ReplyDelete
 5. //எத்தனை குளங்கள் சுத்தமாக இருக்கின்றன//

  நல்லாக்கேளுங்க..
  எத்தனை குளங்கள் காணாமல் போயிடுச்சுன்னு கணக்கெடுத்தா பரிதாபம்தான் மிச்சம்.

  ReplyDelete
 6. உங்கள் அழைப்பிற்கு நன்றி. கட்டாயம் எழுதுவேன். கொஞ்சம் அவகாசம் தேவை.

  ReplyDelete
 7. நேரம் ஒதுக்கி பதிவு இட்டதற்கு மிக்க நன்றி. நோய்களின் பட்டியலும், ஆப்ரிக்கா பற்றி தகவலும் மிக பயனுள்ளது.

  ReplyDelete
 8. நல்ல பதிவு நன்றி..
  அந்த ஈ மொய்க்கும் பாப்பா .. :(

  ReplyDelete
 9. முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். நீரின் அவசியத்தை பற்றியும் அதனால் விளையும் நோய்கள் பற்றியும் தங்களின் இடுகை அருமை. நல்ல பதிவு.

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி ஷங்கர்.

  ReplyDelete
 11. சைவகொத்துப்பரோட்டா said...

  "தேவையான இடுகை"

  ஆமாம். மிக்க நன்றி.

  ReplyDelete
 12. நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 13. உங்கள் எழுத்துநடை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். நன்றாய் எடுத்துச் சொல்வீர்கள் ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 14. அமைதிச்சாரல் said

  "எத்தனை குளங்கள் காணாமல் போயிடுச்சுன்னு கணக்கெடுத்தா பரிதாபம்தான் மிச்சம்."

  நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

  உங்கள் வசதிபோல் எழுதுங்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. மிக்க நன்றி வின்சென்ட்.

  இதில் உங்கள் முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது.
  உங்களுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 16. சுத்தம்,சுகாதாரம்ப் பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

  தண்ணீர் சுத்தம் இல்லாவிட்டால் என்ன நோய் வரும் என்பதை விளக்கியிருக்கிறீர்கள்.

  ஈ மொய்க்கும் குழந்தை நெஞ்சம் நடுங்குகிறது.

  நீர் மேலாண்மை விழிப்புணர்வு நன்று.

  ReplyDelete
 17. Hi,

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

  ReplyDelete
 18. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 19. தேவையான இடுகை, நன்றாக வந்திருக்கிறது கட்டுரை.

  ReplyDelete
 20. நல்ல பதிவு. ஏனுங்க recent ஆ ஒண்ணும் எழுத காணோம்? எழுதுங்க அம்மணி

  ReplyDelete
 21. தண்ணீரின் அவசியத்தை அடுக்கடுக்காய் அழகாய் சொல்லிவிட்டீங்க மாதவி சபாஷ்..

  ReplyDelete
 22. உங்களுடைய ஆர்வத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  ReplyDelete