Sunday, February 7, 2010

அம்பேவல ஹீரோயினின் குத்தாட்டம்

நுவரெலியாவில் அமைந்துள்ள அம்பேவல பாற்பண்ணையில் வெள்ளாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.


இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு இன ஆடுகள் குட்டிகள், காடாய்கள் தனித்தனியாக பாராமரிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக இருந்தது.

நெதர்லாந்து சாணன் இன வெள்ளாடுகள் இருந்தன. இவை ஏறத்தாள 40 கிலோவிலிருந்து 60 கிலோ வரை நிறை உடையன.


ஒன்று ஒன்றரை வருட காலங்களில் தாய்மையடையும் தன்மையன. வயிற்றில் சுமக்கும் காலம் 5 மாதங்களாகும்.

நீண்ட முடிகளுடன் கூடிய ஆடுகளும் இங்கு இருந்தன. அவை சிம்பு ஸ்டைலில் தாடி வைத்து தம்மை அழகுபடுத்தி்ப் பார்த்தன.

ஒழுங்கு பற்றி நிறையவே படித்திருந்தன. நாங்கள் இவைகளிடம்தான் கத்துக்கணும். கொம்புச் சண்டையெல்லாம் போடுக்கல.


இளம் ஆடுகள் ஒழுங்காக நின்று, கம்பி வேலிக்கு வெளியே போடப்பட்டிருந்த புற்களை தலையை நீட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.


இணையத்தில் வரப்போறம் எனத் தெரிஞ்சிடிச்சுப் போல. வெள்ளாட்டார் மிடுக்கான தோற்றத்தில் நிற்கிறார்.


ஒருவருக்கு ஏனிந்தக் கோபமோ? யார் மேல்?
வீட்டுக்காரி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாவோ?


தனியே ஒரு மூலையில் சுவருடன்கொம்பை வைத்து மோதிக் கொண்டிருந்தார்.

நல்ல காலம் அடைத்திருந்ததால் நாம் தப்பினோம்.

நல்ல புத்திசாலி முகத்தைக் காட்டாமல் தனக்குக் கிடைத்த 'அடையாள அட்டையைக் காட்டி நிற்கிறார்.


சுவரில் ஏறிநின்று குதித்துக் கொண்டு என்னைப் பார்... ஒழுங்காகப் படங்கள் எடு என சர்க்கஸ் காட்டிக் கொண்டு நின்றார்.


கிளிக் .. கிளிக் செய்த பின்னர்தான் தனது ஆட்டம் யாவும் முடித்து சந்தோசமாகக் கீழே இறங்கி நின்றார்.

எப்படியெல்லாம் கற்று வைத்திருக்கிறார் நிறையக் குத்துப் பாட்டுக்கு ஆடுவார் போல்.

அடுத்த தமிழ்பட சான்ஸ் நிச்சயம் இவருக்குத்தான்.

மாதேவி

16 comments:

  1. ஃபோட்டோஸ் அழகு! எனக்கும் உங்க ஊருக்கு சுற்றுலா வரணும்போல இருக்கு பார்த்ததும்!

    /அவை சிம்பு ஸ்டைலில் தாடி வைத்து தம்மை அழகுபடுத்தி்ப் பார்த்தன./
    :-))

    ReplyDelete
  2. படமும் கமெண்டும் அழகு..

    ReplyDelete
  3. அருமை படங்கள் & வர்ணிப்பு

    ReplyDelete
  4. ஆட்டோ நெத்தில ஏதோ பூச்சியிருக்குமாம்.. வளர்க்கிற ஆட்டு கிடாயோட நெத்திய குத்தி விட்டீங்கன்னா அது உங்களோட ரொம்ப பாசமாயிடும்.. சின்ன கிடாய்ங்க கிட்ட தலையால முட்டி விளையாடலாம் .. ரொம்ப நல்லாருக்கும்.. ஆனா கொஞ:சம் பின்னாடி போய் ஒரு ஜம்ப் பண்ணி இடிக்கும் போது விலகிடணும்.. இல்லாட்டா மூளை மூக்குவழியா வந்திடும்..

    அழகான படங்கள்.. ஆனா படங்கள் பார்க்கும் பொது மூக்கு பிரச்சனை பண்ணாது.. அங்கே எப்படி சமாளிச்சீங்க ? வாழ்க்கைய நல்லா எஞ்ஜோய் பண்றீங்க போல.. லைட்டா பொறாமையோட வாழ்த்துக்கள்.. :P

    ReplyDelete
  5. எங்களது ஊரைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள், நன்றிகள்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சந்தனமுல்லை.

    பப்புவுடன் வாங்க. சுற்றிப்பார்த்து விட்டு சொல்லுங்க நம்நாட்டின் அழகை.

    ReplyDelete
  7. அண்ணாமலையான் அழகுக்கு நன்றி.

    ReplyDelete
  8. நேசமித்ரன் வர்ணிப்பு அருமை.

    ReplyDelete
  9. லைட்டா பொறாமையோட புல்லட்.:)))

    "மூக்கு பிரச்சனை அங்கே எப்படி சமாளிச்சீங்க ?"
    சின்ன ஆட்டுக்குட்டிகள் இரண்டும் ஒத்தக்காலில் நிண்டுதுகள் பார்க்கணும் எண்டு இதுகளோடை ஆடு கிறதிலும் அதுமேலாக இருந்திச்சு:)

    ReplyDelete
  10. வாருங்கள் யோ வொய்ஸ் (யோகா)
    உங்கள் ஊரா.. பசுமை நிறைந்த அழகிய இடங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. வெள்ளாடா?

    கொம்பு மான்களுக்கு இருக்கிற மாதிரி அழகா இருக்கு.

    ReplyDelete
  12. ஆடுமாடு said...

    வெள்ளாடா?
    உங்களுக்குத்தான் நன்றாகத் தெரிந்திருக்குமே :)

    இனம்- சாணன்.
    நிறம்-வெள்ளை.
    என எழுதியிருந்தார்கள்.
    வெள்ளாடு என நினைத்தேன்.

    நன்றி ஆடுமாடு.

    ReplyDelete
  13. அருமை படங்கள் + வர்ணிப்பு

    ReplyDelete
  14. வாருங்கள் கமலேஷ். மிக்கநன்றி.

    ReplyDelete
  15. நல்ல பதிவு. வாழ்த்தகள்
    -இரா. தங்கப்பாண்டியன்
    vaigai.wordpress.com

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இரா. தங்கப்பாண்டியன்.

    ReplyDelete