Tuesday, October 6, 2009

1887 ல் கட்டப்பட்ட ஏரியில் 2009ல் போட் சவாரி


கிறகரி லேக் நோக்கி எமது வாகனம் பயணப்பட்டது. இது நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அக்காலத்தில் கவர்னராக (1872 - 1877) இருந்த Gregory அவர்களால் 1887ல் கட்டப்பட்டதாம். பீதுருதாலகால மலையிலிருந்து பாயந்து வரும் நனுஓயா அருவியை (Nanu Oya stream) மறித்துக் கட்டப்பட்டதாக அறிகிறோம்.


அருவியைச் சுற்றி வர வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் போகும் பாதையின் அருகே ஓரிடத்தில் பாரிய யந்திரங்கள் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தன. பள்ளமாக இருக்கும் நிலத்தை நிரவிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலோ அல்லது கடைத் தொகுதியோ எதுவோ கட்டப் போகிறார்கள் போலும்.


புற்றீசல் போல அமைக்கப்படும் ஹோட்டல்கள், நகரமயமாதல் மற்றும் விவசாய ஆக்கிரமிப்புகளால் ஏரியின் இயற்கை வனப்பு பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது.
கால நிலையும் நன்றாக இருந்தது. அதிகாலையில் பெய்த மழை ஓய்ந்துவிட்டது. சூரியன் எட்டிப் பார்க்க இதமான வெயிலில் உடல் சுகம் கண்டது. நகர் உயிர்த்துக் கொண்டிருந்தது. படகுச் சவாரி செல்ல ஏற்றதாக இருந்தது.


லேக்கை அடைந்தோம். முன்பு மழை பெய்து விட்டிருந்ததால் லேக்கை சுற்றியுள்ள தரை சேறும் சகதியுமாக இருந்தது. ஒரு வழிப்பாதையாய் காலை எட்டி வைத்து நடந்து சென்று டிக்கற் பெற்று போட்டில் சுற்றிப்பார்க்க ஏறிக் கொண்டோம்.


ஓடும் நீரின் ஊடே போட் நீரைக் கிழித்துச் சென்றது. சுற்றி வரவும் நுவரெலியா நகரின் அழகிய கட்டிடங்கள் இள வெயிலில் சிலிர்த்து நின்றன.

அழகிய நீண்ட பாலம் ஏரியை ஊடறுத்துச் செல்கிறது. பாலத்தின் கீழால் போட் விரைந்து பாய்கிறது. தலையில் இடித்து விடுமோ!


எம்மை அறியாது தலை சற்றுக் குனிகிறது. குனிந்து நிமிர்வதற்கிடையில் நாம் பாலத்தின் மறுபக்கத்தில். 'வாவ்' கூச்சலிடுகிறார்கள். பிள்ளைகளுக்கு உல்லாசம்.

அடர்ந்த நீர்த் தாவரங்கள் ஊடே போட் நகரத் தொடங்கியது. காற்றும் நன்றாக வீசிப் படர்ந்தது. காட்டாற்றின் ஊடே பயணிப்பது போலப் பிரமை. சுற்றுப்புற அழகையும் இரசித்த படியே பயணிப்பதில் ஏற்படும் ஆனந்தம் சொல்லும் தரம் அன்றோ!


அட இறந்கு துறை வந்துவிட்டதா! போட் புறப்பட்ட இடத்தில் மீண்டு நின்றோம். விரைவிலேயே வந்து சேர்ந்து விட்டது என எண்ணிக்கோண்டோம். தண்ணீரையும் போட்டையும் விட்டு வெளிவர மனம் வரவில்லை. 'வன்ஸ் மோர்' என அனைவரும் வாய்விட்டுக் கூறினர். வேறு இடங்களும் பார்க்கச் செல்ல வேண்டி இருந்ததால் மறுபடியும் செல்லாது நிறுத்திக் கொண்டோம்.

இருவர் செல்லும் self boating வசதி அங்கிருந்தது. Life jacket உடன் தாங்களே படகோட்டலாம். சின்னு மிது இருவரும் அதில் போக வேண்டும் என நட்டுப் பிடித்தார்கள்.
படகுகள் கவிழும் கதைகள் நினைவுக்கு வர டாட் மறுத்துவிட்டார். போட்டிங் செல்லாதது இருவருக்கும் மிகுந்த வருத்தம்தான். மறுமுறை எனச்சாட்டுக் கூறிவிட்டோம்.

லேக் அருகே குதூகலம் ஊட்டும் குதிரைச் சாவாரி செய்யலாம். சவாரிக்கு நேரம் இல்லை. முன்பு பல இடங்களில் செய்ததுதானே. குதிரையுடன் படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.குதிரை வண்டிச் சவாரியும் கிடைக்கிறது. திரைப்படங்களில் வருவது போல அழகிய வர்ணப் பூச்சு வண்டி. அதிகாலையில் சவாரி கிடைக்காததால் குதிரை புல் மேயமுயன்று கொண்டிருந்தது. பிரிட்டிஸ் கால குதிரைச் சவாரியை நினைவு ஊட்டுகிறது.

ராஜா ராணி போல பிரயாணம் செய்யலாம்.


குதிரையும் வண்டியும் அழகாக இருக்கிறதா?

சின்னுவிற்கு தான் எடுத்த படங்களில் இப்படம் ரொம்பப் பிடித்தது.

மாதேவி

10 comments:

 1. அருமையான இடங்கள்!
  அருமையான புகைபடங்கள்!

  ReplyDelete
 2. வால்பையன் said...

  அருமையான இடங்கள்!

  வாருங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. பதிவுகள் அருமை இன்னும் வரலாற்று சின்னங்கள் கொண்ட பதிவுகள் இட்டால் நன்று.

  ReplyDelete
 4. மிக்க நன்றி பனங்காற்று.

  "இன்னும் வரலாற்று சின்னங்கள் கொண்ட பதிவுகள் இட்டால்நன்று". முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 5. உங்க பதிவுகள் எல்லாம் அருமை ...!
  படங்களும் நல்லா இருக்கு ..!

  இவ்ளோ நாள் உங்க பதிவுகளை பார்க்காம இருந்துட்டேனே ..!

  ReplyDelete
 6. வாருங்கள் ஜீவன்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 7. உமக்கும் உம்ம காமராவுக்கும் திருஷ்டி சுத்திப் போடணும். உள்ளம் கொள்ளை போகுது.

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 8. உங்கள் ரசனைக்கு நன்றி Jawarlal.

  ReplyDelete
 9. ரொம்ப சூப்பரா இடங்கள் உங்கள் பதிவு மூலம் பார்த்து கொன்டேன்,

  நானும் சிலது போட்டு வைத்துள்ளேன் பாருங்கள்

  www.jaleelakamal.blogspot.com

  ReplyDelete