Monday, December 17, 2012

Beira லேக்கில் ஒரு குட்டித் தீவு

லேக் ஓரமாக நடந்து செல்கின்றோம். மேலே சற்று உயர ரோட்டில் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.




சாலை ஓர பெரிய மரங்கள் கிளைவிரித்து நிற்கின்றன.



 பல மரங்களின் அடிப்பாக வேர்கள் சிமெந்து தரையில் வேர் பாச்சி வெளித்தள்ளி முறுகிப் பருத்துக் காணப்படுகின்றன.

லேக் ஓரம் பேரீச்சமரம் குலை தள்ளி நிற்கின்றது. அடடா... பறித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டார்களே.


காக்கைக் கூட்டத்தாரும் எங்கிருந்தோ சுட்டு வந்த தேங்காய் மூடியை கொத்தித் தின்னுகின்றன.

 

லேக்கில் கூளக்கடாக்கள் குடில் அமைத்து இனிய இல்லறம் நடத்துகின்றன. சில அடிதடிகளும் அவர்களுக்குள்.

 


பிரமச்சாரி ஒருவர் தனி உலகில் நீந்தி மகிழ்கின்றார்.


பல அன்னப் பட்சிகளும் நீந்தி மகிழ்கின்றன. நாமும் பட்சியுடன் பட்சியாக மாறி நீரில் ஓடி மகிழ்கின்றோம். அம்மாவின் முதுகில் குட்டியார் ஏறிச் சவாரி செய்கிறார்.



மாலைச் சூரியன் நீரில் தெறித்து ஒளி தருகின்றான்.



வாத்துக் கூட்டத்தாரும் ஓட்டப் போட்டி வைத்து மகிழ்கின்றார்கள்.


லேக் ஓரமிருந்து குட்டிப் பூங்காத் தீவிற்கு அலுமினிய சீட் பூட்டிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.



கீழே லேக் நீர் ஓட பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று பூங்காவை அடையலாம். நீர் ஓட்டத்தில் பாலத்தில் நடந்து செல்லும்போது பாலமே ஆடுவதுபோல உணர்வு ஏற்படுகிறது. விரைந்து நடந்தால் அலுமினிய சீட்டின் தாம்தோம் சத்தமும் பயமுறுத்துகிறது.

ஜோடி ஜோடியாகவும் குடும்பமாகவும் பலர் பாலத்தைக் கடந்து குட்டித் தீவிற்கு வருகின்றார்கள். பாலத்திலிருந்து அன்னப் பட்சிகள் ஓடித்திரியும் அழகையும் கூளக்கடாக்கள் சிறகு விரித்து வானத்தில் பறக்கும் அழகையும் கண்டு களிக்கலாம்.



குட்டிப் பூங்காத் தீவில் மரங்களின் கீழே இருக்கைகள் அமைத்துள்ளார்கள்.



அமர்ந்திருந்து லேக்கின் மறுகரையையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் கோவிலையும் பார்த்து மகிழலாம்.




சிறுசிறு அழகிய மரங்கள் குட்டித் தீவின் ஓரமாக நாட்டப்பட்டுள்ளன. பூஞ்செடிகள் கரையோரமாக நிரையாக நின்று பூத்துக் குலுங்கி கண் சிமிட்டுகின்றன.




தீவின் நடுவே கூடாரம் அமைத்து மக்கள் அமர்ந்திருக்க வசதி செய்துள்ளார்கள்.




பலரும் வந்திருந்து நாட்பொழுதை இனிமையாகக் கழித்து செல்கின்றார்கள்.
வெளிநாட்டினரும் வருகின்றார்கள். நாங்கள் சென்ற நேரம் சீன நாட்டவர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள்.

குட்டித் தீவைப் பார்க்க மிகவும் சுறுசுறுப்பாக ஒரு அழகிய வெள்ளையரும் வோக்கிங் வருகின்றார். அவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நாங்கள் குதூகலிக்கின்றோம்.


தீவிற்கு நடுவே அமைந்திருந்த சிறிய சுற்றுச் சுவரில் அமர்ந்திருந்து சூழலை ரசித்தோம். சூரியனும் இருள் சூழ மறைந்து இறங்குகின்றான். மக்கள் வீடு திரும்புகிறார்கள்.



விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் மனமின்றி எப்போ திரும்பி வருவோம் என பெற்றோரிடம் கேட்டபடி சென்றார்கள்.


வெள்ளைக் குட்டியாரும் ஓடித் திரிந்து மகிழ்ந்து ஓய்ந்து களைத்து நிற்கின்றார்.


நாங்களும் படங்களைக் கிளிக்கிக் கொண்டு பாலத்தால் நடந்து வருகின்றோம்.

நீரில் சூரியக் கதிரும் பட்டு செவ்நிறமாக தெறிக்கின்றது.

பாலத்தால் இறங்கி படிகளில் ஏறி வீதிக்கு வருகின்றோம்.






ஐஸ் வண்டியும் நிற்கின்றது.






ஒருவர் அமைதியாக மரத்தின கீழ் கண் மூடி அமர்ந்திருக்கின்றார். 
நாம் ரோட்டைக் கடந்து மறுபுறம் வருகின்றோம்.


கோவறு குதிரையார் ஒருத்தர் தெருவோரம் உள்ள காணியில் புல் மேய்ந்து கொண்டு நின்றார்.


சிறிது தூரம் நடந்து விட்டு நாமும் இனிதாக வீடு திரும்பினோம்.


மாதேவி.

16 comments:

  1. beauty of colombo....im proud to be a resident of colombo

    ReplyDelete
  2. அழகான இடமும் அழகான புகைப்படங்களும் அதற்குகுந்த விளக்கங்களும்
    நல்ல பதிவு

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்கின்றேன்.

      மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன்.

      Delete
  4. மிக்க நன்றி Vijay Meme.

    ReplyDelete
  5. நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
    போட்டோவும் அருமை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. Beira ஏரியையும்,குட்டித்தீவையும், Seema Malakaya கோயிலையும் நேரில் பார்ப்பதுபோல் இருந்தது உங்கள் வருணனை. படங்கள் அனைத்தும் அருமை. இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வே.நடனசபாபதி.

      ரசித்ததற்கு மகிழ்கின்றேன். மிக்க நன்றி.

      Delete
  7. கடைசிப்படம் சூப்பர்.அழகான சுற்றுலா உங்களோடு !

    ReplyDelete
  8. ரம்யமான பகிர்வுகள் .. பாராட்டுக்கள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  9. அழகான் படங்கள் நாங்களும் உங்களுடன் வந்து லேக்கையும் குட்டிதீவையும் சுற்றிப்பார்த்தோம்.
    நன்றி.

    ReplyDelete
  10. வருகைதந்து ரசித்து கருத்துக்கள் கூறிய

    ஹேமா.
    இராஜராஜேஸ்வரி.
    அப்பாவி தங்கமணி.
    கோமதி அரசு.

    உங்கள் அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. அவ்வளவு எளிதாய் எங்களால் இந்த இடங்களை காண இயலாது .. அந்த குறையை கொஞ்சம் போக்கியது உங்களின் இந்த பதிவு ... என் நன்றிகள்

    ReplyDelete